அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் - 51
தலைகீழாகத் தொங்கும் மனிதன்!
குடவாசல்,
கோணேஸ்வரர் கோயில் தெரு, அந்தப் பழைய காலனித்துவ பாணி வீட்டின் முதல் மாடி.
ஸ்ரீராம்
தன் மடிக்கணினியில் புளூடூத் எலக்ட்ரோமேக்னடிக் சென்சார் கருவியை இணைத்துக்கொண்டிருந்தான்.
"பாஸ்கர்,
இது எல்லாமே முட்டாள்தனம். பிரிட்டிஷ்காரன் விட்டுட்டுப் போன விக்டோரியன் காலத்து மூடநம்பிக்கை.
இதிலென்ன கபாலா, மாந்திரீகம்?" என்றான் ஸ்ரீராம், தன் வழக்கமான கேலிப் புன்னகையுடன்.
பாஸ்கர்
மேஜை மீது இருந்த அந்தப் பழைய புத்தகங்களைத் தடவிக் கொடுத்தான். "சும்மா இல்ல
ஸ்ரீராம். லண்டன் கோல்டன் டான் அமைப்போட குடவாசல் கிளை இது. அப்போதைய வைஸ்ராய் காலத்துல
இங்க ரகசியமா ஏதோ ஒரு டைம் ஷிப்ட் பரிசோதனை நடந்திருக்குனு லாக் புக்ல இருக்கு."
மேஜை
மேல் 1904 இல் பயன்படுத்தப்பட்ட அதே தாரோ கார்டுகள் பரப்பப்பட்டிருந்தன. பக்கத்தில்
ஒரு பழைய கிராமபோன்.
ஸ்ரீராம்
தன் லேப்டாப்பில் ஒரு கோடைத் தட்டினான். "சரி, ஓர் அல்காரிதம் எழுதிப் பார்ப்போம்.
இந்த ஹீப்ரு எழுத்துக்களை பைனரி கோடா மாத்துனா என்ன வருதுன்னு பாக்கலாம். சைன்ஸ்ல எல்லாமே
ப்ரீக்வென்சிதான்."
அவன்
என்டர் தட்டிய விநாடி, அறையில் இருந்த இன்வெர்ட்டர் பிளாஸ்ட் ஆகி, விளக்குகள் அணைந்தன.
லேப்டாப்
ஸ்கிரீன் மட்டும் ஒருவித ரத்தச் சிவப்பு நிறத்தில் மினுமினுத்தது.
அறையின்
வெப்பநிலை திடீரென ப் பனிப்பிரதேசம் போலக் குறைந்தது. மூச்சுக்காற்று ஆவியாக வெளிவரும்
அளவுக்குக் உறைபனி நிலவியது.
"ஸ்ரீராம்!
ஏசி ஆப்ல இருக்கு. அப்புறம் எப்படி இந்த டெம்ப்ரேச்சர் குறையுது?" என்றான் பாஸ்கர்.
ஸ்ரீராம்
பதில் சொல்லவில்லை. அவன் லேப்டாப் ஸ்கிரீனைப் பார்த்தான். அவன் எழுதிய கோடுக்கு எந்த
சம்பந்தமும் இல்லாமல், ஸ்கிரீனில் தமிழ் எழுத்துக்கள் தாமாகவே டைப் ஆகின,
"உடல்கள்
மட்டுமே மாறுகின்றன. ஆவாஹனம் நிறைவடைந்தது."
திடீரென
அறையின் நாலாபுறமும் இருந்து மாமிசம் கிழியும் சத்தமும், எலும்புகள் நொறுங்கும் அதிர்வும்
கேட்டது.
ஸ்ரீராம்
பயத்துடன் தன் கைகளைப் பார்த்தான். அவனது கைகளில் தோல்கள் மெல்ல சுருங்கி, கைவிரல்
நகங்கள் கருகி, 120 வருடத்துப் பிணத்தின் கைகளைப் போல மாறத் தொடங்கின!
"பாஸ்கர்!
என் உடம்புக்கு என்ன ஆகுது?!" ஸ்ரீராம் அலறினான்.
ஆனால்
பாஸ்கரனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்துக்கொண்டிருந்தது.
பாஸ்கரின் கண்களின் கருவிழிகள் மேல்நோக்கிச் செருகி, வெறும் வெள்ளை விழி மட்டுமே தெரிய,
அவன் கழுத்து 180 டிகிரி தலைகீழாகத் திரும்பியது!
அவனது
வாய் மனுஷக் குரலில் இல்லாமல், பல நூறு பிரேதாத்மாக்கள் ஒன்றுசேர்ந்து கத்துவது போன்ற
பயங்கரமான கரகரப்புடன் பேசியது.
"1904
இல் கோல்டன் டான் அமைப்பினர் உடலை இழந்து இந்த நிலவறையின் அலைவரிசையில் காத்திருந்தார்கள்.
120 வருடம் கழித்து உங்கள் உடல்களை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி!"
ஸ்ரீராம்
தப்பி ஓட கதவை நோக்கிப் பாய்ந்தான். ஆனால் கதவுக்குப் பதில் அங்கே வெறும் செங்கல் சுவர்
மட்டுமே இருந்தது.
எதிரில்
இருந்த பெரிய சுவர்க் கண்ணாடியில் ஸ்ரீராமின் உருவம் தெரியவில்லை. மாறாக, 1904 இல்
இறந்த ஒரு பிரிட்டிஷ் மாந்திரீகனின் முகம். அந்த மாந்திரீகன் ஸ்ரீராமின் உடலுக்குள்ளிருந்து
வெளியே வரத் துடிப்பது போலத் தெரிந்தது!
ஸ்ரீராமின்
தொண்டையிலிருந்து வந்த கடைசி அலறல் சத்தம், அந்த அறையின் சுவர்களுக்குள் அடங்கியது.
மேஜை
மேல் இருந்த தி ஹேங் மேன் தாரோ கார்டில், இப்போது தலைகீழாகத் தொங்கும் மனிதனாக ஸ்ரீராமின்
முகம் தத்ரூபமாக அச்சடிக்கப்பட்டிருந்தது.
வெளியே
கோணேஸ்வரர் கோயில் தெரு அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அறையின் கதவு இனி என்றென்றும்
திறக்கப்படாது.
இனி,
பாஸ்கர்?!
ஸ்ரீராம்?!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
