Showing posts with label e content. Show all posts
Showing posts with label e content. Show all posts

Tuesday, 11 May 2021

தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கான இணையதளம்

 

தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கான இணையதளம்

இந்தக் கொரோனா காலத்தில் குழந்தைகள் பொழுதுபோக்காகக் கற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கீழே உள்ள இணையதள இணைப்பு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. 

Fun corner,

Writing,

Stories,

Grammar,

Vocabulary,

Quick Math,

Clock,

Science,

Social,

Drag & Drop,

Sudoku,

Word Search,

Crossword,

Games ஆகியவற்றோடு

தமிழ் உள்ளிட்ட மொழிகள் என பல்வேறு குழந்தைகள் விரும்பும் தலைப்புகளில் தங்கள் நேரத்தைப் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ளும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள் மகிழ்வுடன் தான் கற்பது அறியாமல் விளையாட்டாகவும் பொழுதுபோக்காவும் கற்கும் வகையில் இந்த இணையதளம் அமைந்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் இக்கொரோனா காலகட்டத்தில் இவ்விணையதளத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதள இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://pschool.in/

Sunday, 9 May 2021

Libre Office இல் இணையலாம்!

Libre Office இல் இணையலாம்!

            MS Office இன் பழைய Version களில் எளிமையாக வேலை செய்ய முடிவதைப் போல அண்மை கால MS Office Version களில் வேலை செய்ய முடிவதில்லை. அடிக்கடி Update கேட்பது, License Key கேட்பது என்று புதிய MS Office Versionகள் லந்து செய்கின்றன. இந்த லந்திலிருந்து விடுபட்டு எளிமையாகவும் இனிமையாகவும் வேலை செய்ய MS Office ஐப் போல வேறு Software இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தால் நீங்கள் Libre Office இல் இணையலாம்.

            Libre Office இன் சௌகரியம் அது ஒரு Open Source Software என்பதுதான். MS Office ஐப் போல பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. License Key போன்ற பிரச்சனைகள் அறவே இல்லை. தேவைப்பட்டால் நீங்கள் நினைத்தால் Update செய்து கொள்ளலாம். இல்லையென்றால் பழைய Version இல் தொடரலாம்.

            அதற்கு முன் Libre Office ஐப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது நலம். MS Office ஐப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு Libre Office ஐப் பயன்படுத்துவதைப் பற்றிப் பெரிதாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. சொல்ல வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால்,

Ø MS Office இன் Word க்கு Libre Office இல் Writer என்று பெயர்.

Ø MS Office இன் Excel க்கு Libre Office இல் Calc என்று பெயர்.

Ø MS Office இன் Power Point க்கு Libre Office இல் Impress என்று பெயர்.

Ø MS Office இன் Paint க்கு Libre Office இல் Draw என்று பெயர்.

Ø இது தவிர Databases க்கு Base ம், Formula Editiing க்கு Math ம் உள்ளது.

MS Office ஐ விட Libre Office இல் உள்ள இன்னொரு கூடுதல் சௌகரியம் என்னவென்றால் Writer ஐ Open செய்தாலே அதிலிருந்து Calc, Impress என்று தேவையானதற்கு மாறிக் கொள்ளலாம். அதாவது எதாவது ஒன்றை Open செய்தால் தேவைப்பட்டதற்கு மாறிக் கொள்ளலாம். MS Office இல் இப்படி நீங்கள் மாறிக் கொள்ள முடியாது. ஒவ்வொன்றையும் தனித்தனியாகத்தான் Open செய்து கொள்ள வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி மாறி Open செய்து கொள்ள முடியாது. மற்றபடி Libre Office ஐ Instal செய்து கொண்டு ஒவ்வொன்றையும் நோண்டி நோண்டி நீங்களே கற்றுக் கொள்ளலாம். உதவி தேவையென்றால் அதற்குரிய Pdf guide இல் படித்துத் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு Libre Office பிடித்திருந்தால் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி Download செய்து கொள்ளுங்கள்.

 https://www.libreoffice.org/

Friday, 19 March 2021

கற்றல் கற்பித்தலில் இணையவழி செறிவேற்றல்

கற்றல் கற்பித்தலில் இணையவழி செறிவேற்றல்

            “Technology is just a tool. In terms of getting the kids working together and motivating them the teacher is the most important.” என்பார் பில்கேட்ஸ். ஆசிரியரின் இடத்தை எந்தத் தொழில்நுட்பமும் பிடிக்க முடியாது என்றாலும் தொழில்நுட்பம் தெரியாத ஓர் ஆசிரியரைத் தொழில்நுட்பம் தெரிந்த ஓர் ஆசிரியர் பின்னுக்குத் தள்ளி விட முடியும். தொழில்நுட்பம் இன்றைய வாழ்க்கையோடு மிகப் பின்னிப் பிணைந்த பிணைப்பைக் கொண்டுள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. குறிப்பாக இன்றைய கொரோனா காலகட்டத்தில் கல்வியில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகம் என்று கூறலாம். பள்ளி மற்றும் கல்லூரித் திறப்பு சாத்தியமாகாத சூழலில் இணையவழியிலான கற்றல் கற்பித்தல் பெற்றிருந்த செல்வாக்கைச் சொற்களில் சொல்ல இயலாது. படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரித் திறப்பு சாத்தியமாகியுள்ள தற்போதைய சூழலிலும் இணைய வழியிலான கற்றல் கற்பித்தல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதை மறுக்க இயலாது.

            இணையவழியில் எவ்வாறெல்லாம் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளலாம் என்பதை இன்றைய ஆசிரியர்கள் பலரும் அறிந்துள்ளனர். ‘புலனம்’ எனப்படும் வாட்ஸ்ஆப்பையும், டெலிகிராமையும் மிகச் சிறந்த கற்றல் கற்பித்தல் ஊடகமாக மாற்றி பல ஆசிரியர்கள் செயல்பட்டுள்ளனர். தாங்கள் சொல்ல விரும்பும் பாடக்கருத்துகளைப் படமாகவும், காணொளியாகவும், ஒலிப்பதிவாகவும் செய்து வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் குழுக்கள் மூலமாக அனுப்பிப் பல ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பித்தல் செய்தனர். பதிலுக்கு மாணவர்களும் தாங்கள் கற்றதை அதே வடிவில் ஆசிரியருக்கு அனுப்பி தங்களின் கற்றல் அடைவை உறுதிப்படுத்தினர்.

            காணொளிகளைச் சிறப்பாக உருவாக்கத் தெரிந்த ஆசிரியர்கள் யூடியூப் மூலமாகவும் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து அதன் இணைப்பை (link) மாணவர்களுக்கு அனுப்பி வைத்தனர். இன்று யூடியூப்பில் இருக்கும் காணொளிகளில் பாடம் கற்பது தொடர்பான ஆசிரியர்கள் உருவாக்கிய காணொளிகள் கணிசம் எனலாம்.

            இன்றைய சூழலில் கற்றல் கற்பித்தலில் (கூகுள்) Google இன் இருப்பு ஒரு புரட்சியை உருவாக்கியிருக்கிறது எனக் கூறலாம். Gmail கணக்கு வைத்திருக்கும் எவரும் கூகுளின் ப்ளாக்ஸ்பாட், கூகுள் பார்ம்ஸ், கூகுள் டாக்குமெண்ட்ஸ், கூகுள் மீட் என்று என்று பலவற்றையும் பயன்படுத்தி இன்றைய சூழலில் மிக எளிதாகக் கற்றல் கற்பித்தலை செய்து உடனுக்குடன் மதிப்பிட்டு விட முடியும் என்பது இதன் பின்னணியில் உள்ள வரப்பிரசாதம் ஆகும்.

            வலைப்பூ எனப்படும் ப்ளாக்ஸ்பாட்டில் ஓர் ஆசிரியர் தான் கற்பிக்க விரும்பும் அனைத்தையும் E-Content ஆக எழுதி விட முடியும். தேவையான இடங்களில் வலைதள முகவரி, யூடியூப் இணைப்புகள், படங்கள் ஆகியவற்றை இணைத்து விட முடியும். பயிற்சித்தாள்கள் எனும் Work Sheet களை உருவாக்கி இணைப்பைக் கொடுத்து விட முடியும். எனது www.teachervijayaraman.blogspot.com இல் அப்படியான சில E-Content நிரம்பிய பாடத்திட்டங்களை நான் செய்து பார்த்துள்ளேன். கூகுள் பார்ம்ஸ் மூலமாக சில மதிப்பீட்டு படிவங்களை உருவாக்கி அதற்கான இணைப்பை ப்ளாக்ஸ்பாட்டில் கொடுத்துப் பார்த்துள்ளேன். கற்றல் கற்பித்தலை இணைய வழியில் வழங்குவதில் கூகுளின் சேவைகள் பெருமளவில் பயன்படும் எனது கருத்து. பல ஆசிரியர்கள் இவ்வகையில் முயன்று பார்த்துள்ளார்கள். இது வரை முயலாதவர்களாக இருந்தால் நீங்களும் முயன்று பார்க்கலாம். நிச்சயம் இம்முயற்சி ஆச்சரியகரமான விளைவுகளைத் தரும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவ்வண்ணம் எழுதுவதை நீங்கள் படித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே கூகுளின் இந்த ப்ளாக்ஸ்பாட்டில்தான் அல்லவா!

            இது பற்றி மேலும் தொடர்ந்து எழுத விருப்பம்தான் என்றாலும், உங்கள் கருத்துகள்தான் தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கு வழிகாட்ட முடியும் என்று நினைக்கிறேன். வாசித்த அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.