Showing posts with label Train stampede. Show all posts
Showing posts with label Train stampede. Show all posts

Monday, 28 April 2025

தொடர்வண்டி கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்?

தொடர்வண்டி கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்?

இதற்கான காரணத்தைக் கண்டறிய நாம் சில தரவுகளை அலச வேண்டும்.

2019 – 20 தரவுகளின்படி தொடர்வண்டியில் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 18 கோடி மட்டுமே. ஆனால் முன்பதிவில்லாமல் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 790 கோடி. இந்த ஒரு தகவல் போதும் ஏன் தொடர்வண்டிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு.

தற்போதைய தொடர்வண்டிகளில் குளிர்சாதன மற்றும் முன்பதிவு பெட்டிகள்தான் அதிகம் இருக்கின்றன. அவற்றில் முன்பதிவு செய்யாதோருக்கான பெட்டிகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. இப்பெட்டிகள் ஒவ்வோராண்டும் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இதையும் நீங்கள் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தரவுகளைக் கொண்டு பார்க்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. அத்தரவுகளின்படி குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 18 கோடியிலிருந்து 36 கோடியாக அதாவது இரு மடங்காக ஆகியிருக்கிறது.

ஏழைகளும் அன்றாடங் காய்ச்சிகளும் அவர்கள் மாதந்தோறும் சம்பாதிக்கும் பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரத்திற்குள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்பதுதான் கட்டுபடியாகும். ஆனால் தொடர்வண்டி நிர்வாகங்கள் அவர்களுக்கான பெட்டிகளைக் குறைப்பதிலேயே குறியாக இருக்கிறது. அனைவரையும் அதிகம் செலவு செய்து முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க வைக்கவே பிரயாணிக்கப்படுகிறது.

முன்பதிவு பெட்டிகளின் நிலைமையையும் அறியாதா என்ன? பணம் இருந்தாலும் ஒரு வாரத்திற்கு முன்பாகப் பதிவு செய்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்கிற நிலைதான் இருக்கிறது.

தொடர்வண்டி நிர்வாகங்கள் முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரித்து, அத்துடன் முன்பதிவு செய்வோருக்கும் இடம் கிடைப்பதை உறுதி செய்தால் நெரிசல்கள் இல்லாத தொடர்வண்டி பயணங்கள் சாத்தியமே.

*****