எங்கள் தேசம் இந்திய தேசம்! – பாடல்
(வகுப்பறையில்
இப்பாடலைப் பாடும் ஒவ்வொரு முறையும் ஒற்றுமையுணர்வையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் உருவாக்கத்
தவறியதில்லை. ஒவ்வொரு வகுப்பறையிலும் பாடப்பட வேண்டிய இப்பாடல் உங்கள் வகுப்பறையிலும்
ஒலிக்கட்டும்.)
எங்கள் தேசம் இந்திய தேசம்
வாழ்க வாழ்கவே!
இந்து முஸ்லீம் கிறித்தவர்கள்
எங்களின் சகோதரர்கள்!
வேறு வேறு வண்ணப் பூக்கள்
ஒன்று சேர்ந்த மாலை நாங்கள்!
வண்ணம் வேறு வேறு என்றாலும்
வாசம் என்றும் ஒன்றுதான்!
(எங்கள்
தேசம்)
சிந்து கங்கை பிரமபுத்திரா
கிருஷ்ணா காவேரி
சென்று சேரும் கடலில் என்றும்
நீரின் தன்மை ஒன்றுதான்!
(எங்கள்
தேசம்)
பேசும் மொழியும் வாழும் இடமும்
வேறு வேறு ஆனால் என்ன?
பாச உணர்வும் பண்பும் அன்பும்
தேசம் முழுதும் ஒன்றுதான்!
(எங்கள்
தேசம்)
No comments:
Post a Comment