Showing posts with label right questions at right time. Show all posts
Showing posts with label right questions at right time. Show all posts

Friday, 18 April 2025

சரியான கேள்விகளைச் சரியாகக் கேளுங்கள்!

சரியான கேள்விகளைச் சரியாகக் கேளுங்கள்!

நாடு சுதந்திரமடைந்த போது நேரு சொல்லியிருக்கிறார்,

“நம் ராணுவ வீர்களில் தற்போது திறமையானவர்கள் இல்லை. ஏன் நாம் ஒரு ஆங்கிலேயரை இந்திய ராணுவ தளபதியாக நியமிக்கக் கூடாது?”

அதற்கு ஒரு ராணுவ வீரர் கேட்டிருக்கிறார், “நாடு சுதந்திமடைந்திருக்கும் இந்த நிலையில் நம் நாட்டை ஆளவும் திறமையான தலைவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நாம் ஏன் ஒரு ஆங்கிலேய இந்தியப் பிரதமரை நியமிக்கக் கூடாது?”

நேரு சுதாரித்துக் கொண்டார்.

இந்த ஒரு நல்ல கேள்விதான் ஓர் இந்தியரை இந்திய ராணுவ தளபதியாக ஆக்கியிருக்கிறது. அதனால்தான் அப்போது கரியப்பா ராணுவ தளபதியாக ஆனார். இல்லையென்றால் நாடு சுதந்திரம் பெற்றும் ஓர் ஆங்கிலேயரே ராணுவ தளபதியாக இருந்திருப்பார்.

சரியான நேரத்தில் சரியான கேள்விகளைக் கேட்காவிட்டால் அதுவே தவறான நெறிமுறைகளை உருவாக்குவதற்குக் காரணமாகி விடும்.

ஆகவே எப்போதும் சரியான கேள்விகளைக் கேளுங்கள்!

*****