Showing posts with label பழைய அளவைகள். Show all posts
Showing posts with label பழைய அளவைகள். Show all posts

Monday, 5 June 2023

காலங்களை அறிவோமா?

காலங்களை அறிவோமா?

வேனில் காலம், கார் காலம், கூதிர் காலம் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம் அல்லவா? அக்காலங்கள் எந்தெந்த மாதங்கள் என்பதை அறிவோமா?

காலம்

தமிழ் மாதங்களில்

ஆங்கில மாதங்களில்

இளவேனில்

(கோடைக்காலம்)

சித்திரை, வைகாசி

ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து ஜூன் முற்பகுதி வரை

முதுவேனில்

(கோடைக்காலம்)

ஆனி, ஆடி

ஜூன் பிற்பகுதியிலிருந்து ஆகஸ்ட் முற்பகுதி வரை

கார் காலம்

(மழைக் காலம்)

ஆவணி, புரட்டாசி

ஆகஸ்ட் பிற்பகுதியிலிருந்து அக்டோபர் முற்பகுதி வரை

கூதிர் காலம்

(குளிர் காலம்)

ஐப்பசி, கார்த்திகை

அக்டோபர் பிற்பகுதியிலிருந்து டிசம்பர் முற்பகுதி வரை

முன்பனிக் காலம்

(பனிக் காலம்)

மார்கழி, தை

டிசம்பர் பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி முற்பகுதி வரை

பின்பனிக் காலம்

(பனிக் காலம்)

மாசி, பங்குனி

பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து ஏப்ரல் முற்பகுதி வரை

தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை குறித்த நேர அளவுகளையும் அறிந்து கொள்வோமா?

காலை

முற்பகல் 6 மணியிலிருந்து முற்பகல் 10 மணி வரை

நண்பகல்

முற்பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை

எற்பாடு

பிற்பகல் 2 மணியிலிருந்து பிற்பகல் 6 மணி வரை

மாலை

பிற்பகல் 6 மணியிலிருந்து பிற்பகல் 10 மணி வரை

யாமம்

பிற்பகல் 10 மணியிலிருந்து முற்பகல் 2 மணி வரை

வைகறை

முற்பகல் 2 மணியிலிருந்து முற்பகல் 6 மணி வரை

*****

Monday, 29 May 2023

அரைக்கால், வீசம் போன்ற பின்ன அளவுகளை அறிவோமா?

அரைக்கால், வீசம் போன்ற பின்ன அளவுகளை அறிவோமா?

நம் முன்னோர்கள் அரைக்கால், வீசம், காணி, முந்திரி போன்ற பின்ன அளவுகளைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்த அளவுகள் எவ்வளவு அளவைக் குறிக்கும் என்பதை அறிவோமா?

¼

கால்

½

அரை

¾

முக்கால்

1/5

நாலுமா

1/8

அரைக்கால்

1/16

வீசம்

1/20

மா

1/32

அரை வீசம்

1/40

அரை மா

1/64

கால் வீசம்

1/80

காணி

1/160

அரைக்காணி

1/320

முந்திரி

*****

Sunday, 21 May 2023

நாழிகை, முகூர்த்தம் பற்றி அறிந்து கொள்வோமா?

நாழிகை, முகூர்த்தம் பற்றி அறிந்து கொள்வோமா?

தற்காலத்தில் நாம் வினாடி, நிமிடம், மணி போன்ற கால அளவைகளுக்கு மாறி விட்டாலும் நாழிகை, முகூர்த்தம், சாமம் போன்ற கால அளவுகளைப் பயன்படுத்தும் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் நாழிகை, முகூர்த்தம், சாமம் போன்றவை எவ்வளவு கால அளவைக் குறிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோமா?

1 நாழிகை

24 நிமிடம்

1 மணி

2.5 நாழிகை

1 முகூர்த்தம்

3¾ நாழிகை

1 சாமம்

7.5 நாழிகை

1 சாமம்

3 மணி

1 பொழுது

4 சாமம்

1 நாள்

60 நாழிகை

1 நாள்

8 சாமம்

1 நாள்

2 பொழுது

1 பக்கம்

15 நாட்கள்

1 மாதம்

2 பக்கம்

1 அயனம்

6 மாதம்

1 ஆண்டு

2 அயனம்

1 வட்டம்

60 ஆண்டுகள்

*****

Sunday, 14 May 2023

ஆழாக்கு, உழக்கு பற்றி அறிந்து கொள்வோமா?

ஆழாக்கு, உழக்கு பற்றி அறிந்து கொள்வோமா?

நமது தாத்தாமார்கள் மற்றும் பாட்டிமார்கள் ஆழாக்கு, உழக்கு, குறுணி, பதக்கு, வீசம் போன்ற அளவுகளைக் குறிப்பிடுவார்கள். நாம் லிட்டர், மில்லி லிட்டர், கிராம், கிலோ கிராம் போன்ற அளவைகளுக்கு மாறி விட்டோம். என்றாலும் அவர்கள் குறிப்பிடும் அளவுகள் எவ்வளவு அளவைக் குறிக்கும் என்பதை அறிந்து கொள்வோமா?

1 ஆழாக்கு

168 மில்லி லிட்டர்

1 உழக்கு

336 மில்லி லிட்டர்

1 உழக்கு

2 ஆழாக்கு

1 உரி

2 உழக்கு

1 நாழி

2 உரி

1 குறுணி

8 நாழி

1 பதக்கு

2 குறுணி

1 தூணி

2 பதக்கு

1 கலம்

3 தூணி

1 கலம்

64.5 லிட்டர்

1 தூணி

21.5 லிட்டர்

1 பாலாடை

30 மில்லி லிட்டர்

1 குப்பி

700 மில்லி லிட்டர்

1 அவுன்ஸ்

31 கிராம்

1 பலம்

35 கிராம்

1 வீசம்

1400 கிராம்

1 வராகன்

4 கிராம்

*****