Showing posts with label வடை போச்சே. Show all posts
Showing posts with label வடை போச்சே. Show all posts

Saturday, 5 October 2024

தலைமைப்பண்புக்கும் வடைக்கும் சம்பந்தம் இருக்கிறது!

தலைமைப்பண்புக்கும் வடைக்கும் சம்பந்தம் இருக்கிறது!

தலைமைப் பண்புக்கும் வடைக்கும் சம்பந்தம் இருக்கிறது.

இதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்து கொள்ளாது போனால், பின்னர் வடை போச்சே என்று கவலைப்பட நேரிடும்.

இப்போது தலைமைப் பண்புக்கும் வடைக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் கேட்டது ஆமை வடையும் சட்டினியும்.

உங்களுக்கு வந்தது மெது வடையும் சாம்பாரும்.

அதை ஏற்றுக் கொண்டு நீங்கள் சாப்பிட்டீர்கள்.

ஆனால் ஏன் மாறி வந்தது என்பது குறித்து நீங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.

தலைமைப் பண்பின் அடிப்படை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல.

கேள்விக் கேட்பதிலிருந்து அது துவங்குகிறது.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

வடை போச்சே என்று புலம்பினால் அது நிச்சயம் தலைமைப்பண்புக்கு அழகேயில்லை.

வடை மாறிடுச்சே என்று அது பற்றிக் கேள்வி கேட்காமல் இருந்தாலும் அதுவும் தலைமைப்பண்புக்கு அழகில்லை.

இந்தப் புரிதலோடு சூடாக ஒரு வடையை வாங்கிச் சாப்பிடுங்கள். தலைமைப் பண்பு பற்றி இன்னும் கூடுதலாக உங்களுக்குப் புரிய வரும்.

*****