கல்வி & பொது அறிவுச் செய்திகள் (26.08.2025)
1) தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை
ரேவதி, திருப்பூர் அரசுப் பள்ளி ஆசிரியை விஜயலெட்சுமி ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர்
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2) தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு
அனுமதி கிடையாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
3) தமிழகத்தின் மாநிலக் கல்வி கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும்
என தமிழக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
4) 2026 இல் சென்னையில் நடைபெறும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில்
100 நாடுகள் பங்கேற்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தெரிவித்துள்ளார்.
5) திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
6) தமிழகம் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
7) தமிழ்நாட்டில் முதல் முறையாகச் சென்னை மாநகராட்சியின் சேவைகளை
வாட்ஸ்ஆப்பில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
8) தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்
தொடங்க தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
9) முதல் முறை வங்கிக் கடன் பெறுவோருக்குக் கடன் தகுதி எண்
(சிபில் ஸ்கோர்) கட்டாயமில்லை என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
10) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை
இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
11) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின்
வான்குடை மிதவை சோதனை (பாரசூட் சோதனை) வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
12) ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி
பிரதாப் சிங் டோமர் தங்கம் வென்றார்.
Education & GK News
1) Revathi, a private school teacher from Chennai
Mylapore and Vijayalakshmi, a government school teacher from Thiruppur, have
been announced as winners of the National best Teacher Award in Tamil Nadu.
2) The Tamil Nadu government has announced that
hydrocarbon projects will not be allowed in any part of Tamil Nadu.
3) The Tamil Nadu government has firmly stated that new
history will be created with the state education policy of Tamil Nadu.
4) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has
stated that 100 countries will participate in the International Book Fair to be
held in Chennai in 2026.
5) President Draupadi Murmu is coming to Tamil Nadu on
September 3 to participate in the convocation ceremony of Thiruvarur Central
University.
6) Tamil Nadu has achieved 11.19 percent economic
growth.
7) For the first time in Tamil Nadu, the facility to
receive Chennai Corporation services on WhatsApp has been made available.
8) The Tamil Nadu government has sought permission from
the central government to start new medical colleges in 5 districts including
Tenkasi.
9) The Finance Ministry has announced that the CIBIL
score will not be mandatory for first-time bank loan takers.
10) India has successfully tested an indigenously
developed air defense weapon system.
11) The parachute test of the Gaganyaan project to send
humans into space was successfully tested.
12) India's Aishwarya Pratap Singh Tomar won gold at the
Asian Shooting Championship.
No comments:
Post a Comment