கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.08.2025)
1) பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை
குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2) சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று வந்த சுபான்சு சுக்லா
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்.
3) பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை
650 ஆக அதிகரித்துள்ளது.
4) குழந்தைகளுக்காகப் போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர்
புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் மனைவி மெலானியா உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
5) தமிழகத்தில் ஆகஸ்ட் 23 முதல் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6) ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 45000 கன அடியாக அதிகரித்துள்ளது.
7) ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்பும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்திக்கின்றனர்.
Education & GK News
1) C.P. Radhakrishnan has been announced as the Vice
Presidential candidate of the National Democratic Alliance including the
Bharatiya Janata Party.
2) Subhanshu Shukla, who was visiting the International
Space Station, has returned from the United States.
3) The death toll due to heavy rains in Pakistan has
increased to 650.
4) US President Donald Trump's wife Melania has written
a heartfelt letter to Russian President Vladimir Putin asking him to stop the
war for the sake of children.
5) The Meteorological Department has said that rains are
likely to continue in Tamil Nadu from August 23.
6) The water inflow into the Okenakkal has increased to
45,000 cubic feet.
7) US President Donald Trump and Ukrainian President
Zelensky are meeting to prepare a peace agreement between Russia and Ukraine.
No comments:
Post a Comment