Showing posts with label bard. Show all posts
Showing posts with label bard. Show all posts

Sunday, 3 September 2023

செடிகள், மரங்கள் மற்றும் பயிர்களின் ஆரோக்கியம் அறிய...

செடிகள், மரங்கள் மற்றும் பயிர்களின் ஆரோக்கியம் அறிய...

காய்கறித் தோட்டம் போடுபவர்கள், விவசாயப் பயிர்கள் பயிரிடுபவர்கள், மரம் வளர்ப்பவர்கள் ஆகியோரின் முக்கிய பிரச்சனை நோய்த்தொற்று. ஒரு செடியில் அல்லது பயிரில் அல்லது மரத்தில் ஏதேனும் நோய் தோற்றினால் போதும் ஒட்டுமொத்த தோட்டத்திற்கும், வயலுக்கும் அது பரவி விடும். நோய்த்தடுப்பில் முதன்மையான அம்சம் நோய்த்தொற்றை ஆரம்பத்தில் கண்டறிந்து உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிந்து அதை செயல்படுத்துவதாகும். அதற்கு உதவும் வகையில் PictureThisAI என்ற செயலி உதவுகிறது. இந்தச் செயலியை உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து நீங்கள் பயிர்கள், செடிகள், மரங்கள் போன்றவற்றைப் படம் பிடித்தால் போதும் நீங்கள் பயிரிடும் தாவரம் குறித்த அத்தனை விவரங்களோடு அவற்றில் ஏதேனும் நோய்த்தொற்று இருக்கிறதா என்கிற விவரங்கள் வரை அத்தனையையும் அலசி ஆராய்ந்து இந்தச் செயலி தெரிவித்து விடும். மேலும் இச்செயலி குறித்து அறியவும் அதன் தொழில்நுட்பம் குறித்து அறியவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.picturethisai.com/

*****

Thursday, 3 August 2023

AIஆல் உருவாக்கப்பட்டதைக் கண்டறிய உதவும் தளம்

AIஆல் உருவாக்கப்பட்டதைக் கண்டறிய உதவும் தளம்

ஒரு படமானது (images) இயற்கை நுண்ணறிவால் அதாவது மனிதரால் உருவாக்கப்பட்டதா அல்லது செயற்கை நுண்ணறிவால் அதாவது AIஆல் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய உதவும் தளம்தான் aiornot என்கிற தளம். இத்தளத்தில் நீங்கள் சந்தேகிக்கும் படத்தை (images) drag and drop செய்தால் போதும். 95 சதவீதம் துல்லியமாக அப்படம் எதனால் உருவாக்கப்பட்டது என்பதை இத்தளம் சொல்லும் என்கிறார்கள். நீங்களும் உங்களிடம் இருக்கும் படங்களை (images) முயற்சித்துப் பாருங்களேன். இத்தளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.aiornot.com/

*****

Thursday, 27 July 2023

Open AI இன் Dall-e இல் படம் வரைந்து பாருங்கள்!

Open AI இன் Dall-e இல் படம் வரைந்து பாருங்கள்!

படம் வரைவதற்காக செயற்கை நுண்ணறிவு தளமான Chat GPT இன் Open AI ஆனது Dall-e என்ற ஒவியம் வரைவதற்கான தொழில்நுட்ப பரிசோதனைத் தளத்தை வெளியிட்டுள்ளது. இத்தளத்தில் நீங்கள் விரும்பும் வகைக்கு ஏற்ப உங்கள் விருப்பங்களைச் சொற்களாகவோ, வாக்கியங்களாகவோ உள்ளீடு செய்தால் போதும் இத்தளமானது ஓவியங்களை வரைந்து தள்ளி விடும். Chat GPTக்கு Login செய்தது போல Login செய்து இத்தளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://openai.com/dall-e-2

*****

கற்பனை வளத்தைப் பயன்படுத்திப் படங்களை உருவாக்க…

உங்கள் கற்பனை வளத்தைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வகையிலான படங்களை உருவாக்கக் கீழே உள்ள இணையதளத்திற்குச் செல்லவும். Login செய்து பயன்படுத்தவும். Subscription Plansகளில் சந்தா செலுத்தியும் நீங்கள் விரும்பும் படங்களை உங்கள் கற்பனைக்கேற்றவாறு உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 https://www.midjourney.com/

*****

Wednesday, 19 July 2023

கூகுள் BARD பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!

கூகுள் BARD பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!

வரப் போகிற காலம் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) காலம். Chat GPT இதில் முன்னணியில் போய்க் கொண்டு இருக்கிறது. அதற்காக தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் சும்மா இருக்குமா? அதுவும் Chat GPTக்குப் போட்டியாக BARD என்ற செயற்கை நுண்ணறிவுக்கான பரிசோதனைத் தளத்தைக் கட்டமைத்து வருகிறது. Chat GPT ஐ நீங்கள் பயன்படுத்துவதைப் போல கூகுள் BARD யும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.

BARD தளத்தில் நீங்கள் புதிய உலாத்தலைச் (New Chat) செய்து பார்க்கலாம். உங்கள் வினாக்கள் அல்லது சந்தேகங்களை Enter a prompt here என்பதில் தட்டச்சு செய்தோ அல்லது குரல் வழியாக Microphone Option மூலமாகவோ உள்ளீடு செய்து BARDஉடன் நீங்கள் உரையாடலாம், விவாதிக்கலாம், தேவையான பதில்களைப் பெறலாம்.

BARD உடன் நிகழ்த்திய அதே உரையாடல்களையும் வினாக்களையும் Chat GPT உடனும் நீங்கள் செய்து பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. Chat GPT ஒருபடி மேலே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் கூகுள் BARDஐ மேம்படுத்தவே செய்யும்.

இன்னும் சில நாட்களில் Chat GPTஐ கூகுளின் BARD விஞ்சலாம். யார் கண்டது? எது எப்படியே நீங்கள் BARDலும் ஒரு பார்வை பார்த்து விடுங்களேன். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்த்து BARDஇல் உங்கள் அனுபவங்கள் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

 https://bard.google.com/

*****