Showing posts with label World Experience. Show all posts
Showing posts with label World Experience. Show all posts

Saturday, 31 May 2025

உலக அனுபவம் சொல்லும் உன்ன மொழிகள்!

உலக அனுபவம் சொல்லும் உன்ன மொழிகள்!

பணம் ஒரு தடையே அல்ல. ஒரு யோசனை கூட தோன்றாமல் இருப்பதுதான் மாபெரும் தடை.

-          கென் ஹகுடா

 

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க வழி அதை மடித்து பைக்குள் வையுங்கள் என்பதுதான். (அநாவசியமாகப் பணத்தைப் பையிலிருந்து எடுத்து செலவழிக்காதீர்கள்)

-          கிம் ஹப்பார்ட்

 

பாதை எங்கெல்லாம் போகிறதோ, அங்கெல்லாம் போகாதீர்கள். எங்கே பாதை இல்லையோ அங்கு செல்லுங்கள். பாதையை உருவாக்குங்கள்.

-          எமர்சன்

 

கையில் பணமில்லாத நிலை நம் சுயமரியாதையை குழைத்து விடும். சம்பாதிப்பது மேன்மையானவர், கண்ணியமானவர் என்ற புகழைத் தானே கொண்டு வரும்.

-          ஜான் சோபோரிக்

 

நீங்கள் சம்பாதிக்கும் பணம்தான் உங்களைப் பற்றி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பின் அடையாளம்.

-          இடாவு கோயெனிக்கன்

 

நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அதிலுள்ள பிரச்சனைகளையும் சவால்களையும் கண்டறிவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு.

-          டேவிட் ராக்வெல்

 

நிறைய பணத்தை வைத்துக் கொண்டு ஏழையாக வாழ விரும்புகிறேன்.

-          பிக்காஸோ

 

உங்களின் மிகப் பெரிய சொத்து உங்களின் சம்பாதிக்கும் திறன்.

-          பிரெய்ன் டிரேசி

 

கால்பந்தை விட ஒப்பந்தங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கிறேன்.

-          பீலே

 

முதலீடு பணத்தை வேலை வாங்குகிறது. பணத்தைப் பாதுகாக்க ஒரே வழி அதை முதலீடு செய்வதுதான்.

-          கிரேன்ட் கார்டோனே

 

மிகச் சிறந்த பழிவாங்கல் என்பது மகத்தான வெற்றி பெறுவதுதான்.

-          பிரான்க் சினாட்ரா

 

மனிதர்கள் அவர்களுக்குத் தேவையானதை அரிதாகவே வாங்குகிறார்கள். அவர்களுக்கு விருப்பமானத்தைத்தான் எப்போதும் வாங்குகிறார்கள்.

-          சேத் கோடின்

 

நீங்கள் வெற்றி பெறுவது தற்செயலாக நடந்து விடாது. முன் தயாரிப்புகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

-          ரோஜர் மாரிஸ்

 

பேசுவதற்கு முன் கவனியுங்கள். எழுதுவதற்கு முன் யோசியுங்கள். முதலீடு செய்வதற்கு முன் ஆராயுங்கள். விமர்சனம் செய்வதற்கு முன் காத்திருங்கள். விடுவதற்கு முன்பு முயன்று பாருங்கள். ஓய்வுக்கு முன் சேமித்து விடுங்கள்.

-          வில்லியம் ஆர்தர்வார்டு

 

ஓர் யோசனையின் மதிப்பு அதைப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது.

-          எடிசன்

 

வெற்றியின் சுவையைக் கூட்டும் ஒரு சுவைதான் தோல்வி.

-          ட்ரூமேன் கபோட்

 

வியாபாரம் என்பது விளையாட்டும் போரும் கலந்த ஒரு கலவை.

-          ஆன்ட்ரே மௌரேய்ஸ்

*****