Showing posts with label SLAS Test. Show all posts
Showing posts with label SLAS Test. Show all posts

Thursday, 2 January 2025

3, 5, 8 வகுப்புகளுக்கு மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தேர்வு (SLAS)


3, 5, 8 வகுப்புகளுக்கு மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தேர்வு (SLAS)

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,5,8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த மாதம் கற்றல் அடைவுத் திறன் தேர்வு நடத் தப்பட உள்ளது.

இது குறித்துப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு,

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது 'SLAS' எனும் மாநில கற்றல் அடைவுத் திறன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம்மாணவர்களுக்கு SLAS தேர்வு ஜனவரி 3 அல்லது 4 ஆம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெ றும்.

வினாத்தாளில் 3-ஆம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ஆம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ஆம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும்.

இதற்கான அறைக் கண்காணிப்பாளர்களாகக் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 71,019 மாணவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்குத் தேர்வு நடத்துவதற்கு உரிய முறையான பயிற்சி வழங்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

இதுதவிர தேர்வு கண்காணிப்பு பணிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் கட்டாயம் ஈடுபடுவர்.

எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் வழிகாட்டுதல்களின்படி தேர்வைச் சிறப்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிப்பர்.