Showing posts with label Vallinam. Show all posts
Showing posts with label Vallinam. Show all posts

Tuesday, 7 January 2025

வல்லினம் மிகும் இடங்களும், மிகாத இடங்களும்

வல்லினம் மிகும் இடங்களும், மிகாத இடங்களும்

வல்லினம் மிகும் இடங்கள்

வ. எண்

மிகும் இடங்கள்

எடுத்துக்காட்டு

1.

சுட்டுத்திரிபு

இந்தப் பக்கம்

2.

வினாத்திரிபு

எந்தப் பக்கம்

3.

இரண்டாம் வேற்றுமை

தலையைக் காட்டு

4.

நான்காம் வேற்றுமை

எனக்குத் தெரியும்

5.

வினையெச்சம்

ஓடிக் களைத்தான்

6.

வன்றொடர்க் குற்றியலுகரம்

படித்துப் பார்த்தார்

7.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

செல்லாக் காசு

8.

உவமைத் தொகை

தாய்த்தமிழ்

9.

உருவகம்

தமிழ்த்தாய்

10.

எண்ணுப்பெயர்

எட்டுத்தொகை

11.

திசைப்பெயர்

வடக்குத் தெரு

12.

அப்படி, இப்படி எனும் சொற்கள்

அப்படிச் செய்தான்

 

வல்லினம் மிகாத இடங்கள்

வ. எண்

மிகாத இடங்கள்

எடுத்துக்காட்டு

1.

எழுவாய்ச் சொற்கள்

தம்பி படித்தான்

2.

பெயரெச்சம்

எழுதிய பாடல்

3.

எதிர்மறைப் பெயரெச்சம்

எழுதாத பாடல்

4.

மென்றொடர் குற்றியலுகரம்

தின்று தீர்த்தான்

5.

வினைத்தொகை

ஊறுகாய்

6.

படி என முடியும் சொற்கள்

எழுதும்படி சொன்னேன்

7.

உம்மைத் தொகை

தாய் தந்தை