வல்லினம் மிகும் இடங்களும், மிகாத இடங்களும்
வல்லினம் மிகும் இடங்கள்
| 
   வ. எண்  | 
  
   மிகும் இடங்கள்  | 
  
   எடுத்துக்காட்டு  | 
 
| 
   1.  | 
  
   சுட்டுத்திரிபு  | 
  
   இந்தப் பக்கம்  | 
 
| 
   2.  | 
  
   வினாத்திரிபு  | 
  
   எந்தப் பக்கம்  | 
 
| 
   3.  | 
  
   இரண்டாம் வேற்றுமை  | 
  
   தலையைக் காட்டு  | 
 
| 
   4.  | 
  
   நான்காம் வேற்றுமை  | 
  
   எனக்குத் தெரியும்  | 
 
| 
   5.  | 
  
   வினையெச்சம்  | 
  
   ஓடிக் களைத்தான்  | 
 
| 
   6.  | 
  
   வன்றொடர்க் குற்றியலுகரம்  | 
  
   படித்துப் பார்த்தார்  | 
 
| 
   7.  | 
  
   ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  | 
  
   செல்லாக் காசு  | 
 
| 
   8.  | 
  
   உவமைத் தொகை  | 
  
   தாய்த்தமிழ்  | 
 
| 
   9.  | 
  
   உருவகம்  | 
  
   தமிழ்த்தாய்  | 
 
| 
   10.  | 
  
   எண்ணுப்பெயர்  | 
  
   எட்டுத்தொகை  | 
 
| 
   11.  | 
  
   திசைப்பெயர்  | 
  
   வடக்குத் தெரு  | 
 
| 
   12.  | 
  
   அப்படி, இப்படி எனும் சொற்கள்  | 
  
   அப்படிச் செய்தான்  | 
 
வல்லினம் மிகாத இடங்கள்
| 
   வ. எண்  | 
  
   மிகாத இடங்கள்  | 
  
   எடுத்துக்காட்டு  | 
 
| 
   1.  | 
  
   எழுவாய்ச் சொற்கள்  | 
  
   தம்பி படித்தான்  | 
 
| 
   2.  | 
  
   பெயரெச்சம்  | 
  
   எழுதிய பாடல்  | 
 
| 
   3.  | 
  
   எதிர்மறைப் பெயரெச்சம்  | 
  
   எழுதாத பாடல்  | 
 
| 
   4.  | 
  
   மென்றொடர் குற்றியலுகரம்  | 
  
   தின்று தீர்த்தான்  | 
 
| 
   5.  | 
  
   வினைத்தொகை  | 
  
   ஊறுகாய்  | 
 
| 
   6.  | 
  
   படி என முடியும் சொற்கள்  | 
  
   எழுதும்படி சொன்னேன்  | 
 
| 
   7.  | 
  
   உம்மைத் தொகை  | 
  
   தாய் தந்தை  | 
 
No comments:
Post a Comment