இருக்கும் இடத்தில் இருந்தால்தான் மதிப்பு – ஒரு கதை!
நாம்
அனைவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் அந்த இருப்புக்குப் பயன் கிடைக்கும்.
பாலைவனத்தில் ரோஜா செடி வளர முடியாது என்பது போல, வளமான சோலையில் கள்ளிச் செடியும்
வளர முடியாது.
கண்ணதாசனும்
இதைப் பாடல் மூலமாக, பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கருடன் சொன்னதாக ஒரு
திரைப்பாடல் எழுதியிருப்பார்.
இதை
விளக்கும்படியான கதை ஒன்றை அறிவோமா?
குட்டி
ஒட்டகம் தாய் ஒட்டகத்திடம் கேட்டது, நமக்கு ஏன் முதுகில் திமில் இருக்கிறது என்று.
பாலைவனத்தில்
வாழும் நமக்குத் தண்ணீர் கிடைக்கும் போது அதை சேமித்து வைத்துக் கொள்ள திமில் இருப்பதாகத்
தாய் ஒட்டகம் சொன்னது.
உடனே
குட்டி ஒட்டகம் நமக்கு ஏன் கண் இமை கெட்டியாக இருக்கிறது என்று கேட்டது.
அதற்குத்
தாய் ஒட்டகம், பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும் போது அதிலிருந்து கண்களைக் காத்துக்
கொள்ளத்தான் அப்படி இருக்கிறது என்று பதில் சொன்னது.
அடுத்து
குட்டி ஒட்டகம் நமக்கு ஏன் பாதங்கள் இப்படி மெத்தை போல இருக்கிறது என்று கேட்டது.
பாலைவன
மணலில் நடப்பதற்கு வசதியாகத்தான் பாதங்கள் அப்படி இருப்பதாகத் தாய் ஒட்டகம் பதில் சொன்னது.
அடுத்து
குட்டி ஒட்டகம் நமக்கு மட்டும் பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியாக இருக்கிறதே என்று
கேட்டது.
பாலைவனத்தில்
இருக்கும் கடினமான தாவரங்களைத் தின்பதற்காகத்தான் அப்படி இருப்பதாகத் தாய் ஒட்டகம்
சொன்னது.
அதற்கு
மேலும் பொறுக்க முடியாமல் குட்டி ஒட்டகம் கேட்டது, இவ்வளவு தகவமைப்புகளை வைத்துக் கொண்டு
நாம் ஏன் இந்த மிருகக் காட்சிச் சாலையில் சகல வசதிகளோடும் அடைபட்டுக் கிடக்கிறோம் என்று.
அதற்குத்
தாய் ஒட்டகம் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?
ஆகவே
நாமும் சவால்களை எதிர்கொள்ளும் இடத்தில் இருந்தால்தான் நம்மிடம் இருக்கும் திறமைகளுக்கு
மதிப்பு இருக்கும். எந்தச் சவால்களும் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கையில் நம்முடைய திறமைகளுக்கு
என்ன மதிப்பு இருக்க முடியும்?
பிரச்சனைகளும்
சவால்களும் இல்லாத இடத்தில் நீங்கள் இருப்பது என்பது, சகல தகவமைப்புகளையும் பெற்று
மிருக காட்சிச் சாலையில் இருக்கும் ஒட்டகத்தைப் போலத்தான்.
ஆகவே
சவால்களும் பிரச்சனைகளும் வருகிறதே என்று கலங்காதீர்கள். அவை நம்முடைய திறமைகள் வெளிப்பட
வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றை எதிர்கொண்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் யார் என்பதை இந்த உலகத்துக்குக் காட்டுங்கள்.
இந்தக்
கதை உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இது
போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment