Sunday, 19 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 20.01.2025 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

2) சென்னையைத் தொடர்ந்து எட்டு மாநகரங்களிலும் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

3) தமிழக எழுத்தாளர்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என்று முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

4) சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 105 நூல்களை முதல்வர் வெளியிட்டார்.

5) இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாச்சார மையத்துக்குத் திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

6) கல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

7) ஜனவரி 31 இல் நாடாளுமன்றம் கூடுகிறது. பிப்ரவரி 1 இல் நாட்டின் பொது வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது.

8) வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய வருமான வரிச்சட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.

9) பருவநிலை மாற்றம் காரணமாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளிடம் பார்வோ வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

10) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

11) ஒரு சவரன் தங்கத்தின் விலை 60000 ரூபாயை நெருங்குகிறது.

12) ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

13) சீனாவின் மக்கள்தொகைப் பெருக்கம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்துள்ளது.

14) காஸாவில் நேற்றிலிருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

English News

1) 8.73 lakh people have travelled on Pongal special buses.

2) The Tamil Nadu government has announced that art festivals will be held in eight cities after Chennai.

3) The Chief Minister has expressed his desire for Tamil Nadu writers to win the Nobel Prize.

4) The Chief Minister released 105 books at the Chennai International Book Festival.

5) A cultural centre in Yazhppanam, Sri Lanka has been named after Thiruvalluvar.

6) The court has ruled that Sanjay Roy is guilty in the Calcutta female doctor murder case.

7) Parliament will meet on January 31. The country's general budget will be presented on February 1.

8) A new income tax law is to be introduced in the upcoming session of Parliament.

9) Parvo virus infection is increasing in pets kept at home due to climate change.

10) The World Bank has predicted that India's economic growth will be 6.7 percent.

11) The price of a sovereign of gold is reaching 60000 rupees.

12) A Pakistani court has sentenced Imran Khan to 14 years in prison in a corruption case.

13) China's population growth has declined for the third consecutive year.

14) A ceasefire in Gaza came into effect from yesterday.

No comments:

Post a Comment