Thursday, 2 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 03.01.2025 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் நாடு தழுவிய அளவில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 37 லட்சம் குறைந்துள்ளது.

2) இம்மாதம் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS) நடைபெற உள்ளது.

3) 2025 ஆம் ஆண்டைப் பாதுகாப்பு சீர்திருத்த ஆண்டாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

4) சென்னை செம்மொழி பூங்காவில் நான்காவது மலர் கண்காட்சியை முதல்வர் துவங்கி வைத்தார்.

5) சிவகாசியில் நாட்காட்டி (காலண்டர்) வியாபாரம் 400 கோடியைக் கடந்துள்ளது.

6) தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நோய் பாதிப்பு கண்டவர்களுக்குக் காய்ச்சல், உடல்வலி, தலைவலி, கருப்பு கொப்புளங்கள் போன்றவை ஏற்படும்.

7) இந்தியாவில் முதன் முறையாக விமானங்களில் வைஃபை சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

8) டிசம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் (ஜிஎஸ்டி) 1.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

9) உலக சதுரங்கச் சாதனையாளர் விருது வென்ற குகேசுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

10) தமிழகத்தைச்  சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் நித்தியஸ்ரீக்கு அர்ச்சுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

English News

1) In the 2023-2024 academic year, the enrollment in schools has decreased by 37 lakhs across the country.

2) The State Level Assessment Survey (SLAS) for students of classes 3, 5 and 8 is to be held this month.

3) The Union Ministry of Defense has declared 2025 as the year of security reforms.

4) The Chief Minister inaugurated the fourth flower exhibition at the Semmozhi Park in Chennai.

5) The calendar business in Sivakasi has crossed Rs 400 crore.

6) The incidence of scrub typhus bacterial infection is increasing in seven districts of Tamil Nadu. Those infected with this disease will experience fever, body aches, headaches, black blisters, etc.

7) Air India has introduced Wi-Fi service on flights for the first time in India.

8) The Goods and Services Tax (GST) collection for December has increased to Rs 1.77 lakh crore.

9) Kukes, who won the World Chess Championship Award, has been announced the Khel Ratna Award.

10) Tulasimathi Murugesan and Nithyasree from Tamil Nadu have been announced the Arjuna Award.

No comments:

Post a Comment