பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) அனைவருக்கும் கல்வி மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2) பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகளைத் திரும்பப்
பெற வேண்டும் என முதல்வர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
3) திருவாரூர் மாவட்டத்தின் மூன்றாவது புத்தகக் கண்காட்சிக்கான
இலச்சினையை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டார்.
4) திருவாரூர் மாவட்ட புத்தகக் கண்காட்சி ஜனவரி 24 தொடங்கி
பிப்ரவரி 2 வரை பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
5) ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர்.
6) கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கின் குற்றவாளியான சஞ்சய்
ராய்க்கு மரணம் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7) நடப்பு ஆண்டில் 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய
அரசு அனுமதி அளித்துள்ளது.
8) அமெரிக்காவின் நலனுக்காக வெளிநாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும்
என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
9) உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவற்றில்
இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
English News
1) School Education Minister Anbil Mahesh
Poyyamozhi has said that poverty can be eradicated through education for all.
2) The Chief Minister has written a letter
to the Central Government demanding that the new regulations of the University
Grants Commission be withdrawn.
3) District Collector Charusree released the
logo for the third book fair of Tiruvarur district.
4) The Tiruvarur district book fair will be
held for ten days from January 24 to February 2.
5) 47 candidates are contesting the Erode
East constituency by-election.
6) Sanjay Rai, the accused in the Kolkata
female doctor murder case, has been sentenced to life imprisonment.
7) The Central Government has allowed the
export of 1 million tonnes of sugar in the current year.
8) US President Donald Trump has said that
additional taxes will be imposed on foreign countries for the benefit of the
United States.
9) The United States has announced its
withdrawal from the World Health Organization and the Paris Agreement.
No comments:
Post a Comment