இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 29.01.2025 (புதன்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) பள்ளிக் கல்வித் துறையில் 47000 தற்காலிகப் பணியிடங்களை
நிரந்தர பணியிடங்களாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2) நீட் தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தேர்வு நேரமும் 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
3) தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள கட்சிக் கொடி கம்பங்களை
12 வாரங்களுக்குள் அகற்ற உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
4) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
5) ‘சாம்சங் இந்தியா’ தொழிற்சங்கத்துக்குத் தமிழக அரசு அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
6) தேசிய ஊரகத் திட்டத்திற்கான 1635 கோடி நிதியை விடுவிக்குமாறு
மத்திய நிதி அமைச்சரிடம் தமிழக நிதி அமைச்சர் கோரிக்கை வைத்தார்.
7) இந்தியாவில் கிராமப்புற பெண் தொழிலாளர்கள் 15 கோடியாக
அதிகரித்துள்ளனர்.
8) தமிழகத்தில் 104 நாட்கள் நீடித்த வடகிழக்குப் பருவமழை
விலகியது.
9) அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.
10) வங்கதேசத்திற்கு அளித்து வரும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
11) இந்தியாவிடமிருந்து 3884 கோடிக்கு பிரமோஸ் ஏவுகணைகளை
இந்தோனேசியா வாங்குகிறது.
English News
1) The Tamil Nadu government has
issued an order to convert 47,000 temporary posts in the school education
department into permanent posts.
2) It has been made mandatory to
answer all questions in the NEET exam. The exam time has also been reduced to 3
hours.
3) The High Court has ordered the
removal of party flagpoles from public places and roads in Tamil Nadu within 12
weeks.
4) The Veeranam lake, which supplies
drinking water to Chennai, has reached its full capacity.
5) The Tamil Nadu government has
granted recognition to the ‘Samsung India’ labour union.
6) The Tamil Nadu Finance Minister
has requested the Union Finance Minister to release Rs 1,635 crore for the
National Rural Employment Guarantee Scheme.
7) The number of rural women workers
in India has increased to 15 crore.
8) The 104-day-long northeast monsoon
has ended in Tamil Nadu.
9) Indian Prime Minister Narendra
Modi congratulated Donald Trump on his inauguration as the US President over
the phone.
10) The US has stopped its financial
assistance to Bangladesh.
11) Indonesia is buying BrahMos
missiles from India for 3884 crores.
No comments:
Post a Comment