Wednesday, 1 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 02.01.2025 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாகக் கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

2) அதானி நிறுவனம் விண்ணப்பித்த திறன்மிகு மின்கணக்கீட்டு கருவிக்கான (ஸ்மார்ட் மீட்டர்) ஒப்பந்தப் புள்ளியை (டெண்டர்) தமிழக மின்வாரியம் நிராகரித்தது.

3) தமிழகத்தில் புதிய வகை நிமோனியா பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

4) ஒரே ஆண்டில் 10,701 பேர் காலியாக உள்ள அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

5) ஜனவரியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 100வது ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

6) பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான முன்சீட்டு (டோக்கன்) ஜனவரி 3 முதல் வழங்கப்படும்.

7) பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான விநியோகம் ஜனவரி 9 முதல் துவங்கும்.

8) 2024 இல் தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

9) சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English News

1) The Chief Minister has announced that the last week of December will be celebrated as Thirukkural Week every year.

2) The Tamil Nadu Electricity Board has rejected the tender for the smart meter applied for by Adani Company.

3) The Health Department has said that there is no new type of pneumonia in Tamil Nadu.

4) The Tamil Nadu Public Service Commission (TNPSC) has said that 10,701 people have been selected for vacant government jobs in a single year.

5) ISRO Chairman Somnath has announced that the 100th rocket will be launched from Sriharikota in January.

6) The token for the Pongal gift set will be issued from January 3.

7) The distribution of the Pongal gift set will start from January 9.

8) In 2024, Tamil Nadu received 24 percent more rainfall than normal.

9) The central government has announced that there will be no change in the interest rate for small savings schemes.

No comments:

Post a Comment