Wednesday, 22 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 23.01.2025 (வியாழன்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 23.01.2025 (வியாழன்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தில் 31 நிறுவனங்கள் 141 கோடி பங்களிப்பு செய்துள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

2) அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவால் 18,000 இந்தியர்கள் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

3) பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

4) பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய நெறிமுறைகளுக்கு எதிராகக் கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

5) கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

6) கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

7) துருக்கியில் 12 மாடி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

8) இந்தோனேசியாவில் மழை வெள்ளத்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

English News

1) The School Education Department has informed that 31 companies have contributed 141 crores to the ‘Namma Ooru Namma Paali’ scheme.

2) 18,000 Indians have returned to the country due to the order of US President Trump.

3) Governor R.N. Ravi has said that Tamil Nadu is a safe state for women.

4) The Kerala Assembly has passed a resolution against the new norms of the University Grants Commission.

5) The Chief Minister will lay the foundation stone of the Keezhadi Open Museum today.

6) The Central Government has formed a committee to study the issue of increasing the moisture content of the paddy being procured.

7) 66 people have died in a fire in a 12-storey hotel in Turkey.

8) 17 people have died due to rain and floods in Indonesia.

No comments:

Post a Comment