Thursday, 30 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 31.01.2025 (வெள்ளி)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 31.01.2025 (வெள்ளி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) திரிவேணி சங்கமத்தில் கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.

2) குடியரசு தின விழா அணிவகுப்பில் மகா கும்பமேளாவைக் காட்சி படுத்திய உத்திரபிரதேச அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

3) இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. 62 சட்ட மசோத்தாக்கள் தாக்கல் ஆகின்றன.

4) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலை முதன்மைத் தேர்வுக்கான தேர்வறை நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5) மின்சார சுடுநீர்க் கருவியை நீரைச் சூடுபடுத்தியதும் மின்சாரத்தை நிறுத்தி விட்டுப் பயன்படுத்துமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

6) சென்னை பெருநகர தொடர்வண்டி நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தத்திற்கான முன்பதிவு முறை  நாளையிலிருந்து ரத்து செய்யப்படுகிறது.

7) அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்டுகளைச் செலுத்தும் சாத்தியம் உள்ளதாக இஸ்ரோ தலைவரி வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

8) 34,300 கோடி முதலீட்டில் முக்கிய கனிமத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

9) தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

English News

1) 30 people died in a stampede at the Kumbh Mela at Triveni Sangam.

2) The Uttar Pradesh float that displayed the Maha Kumbh Mela in the Republic Day parade has been awarded the first prize.

3) Parliament is meeting today. 62 bills are being introduced.

4) The Hall ticket for the Tamil Nadu Public Service Commission's Group II and IIA main examination can be downloaded.

5) The Electricity Board has advised that electric water heaters should be switched off after heating the water.

6) The monthly parking reservation system at Chennai Metro stations will be canceled from tomorrow.

7) ISRO Chairman V. Narayanan has said that there is a possibility of launching 100 rockets in the next 5 years.

8) The Union Cabinet has approved major mineral projects with an investment of Rs 34,300 crore.

9) Due to the low pressure area formed in the southwest Bay of Bengal, there is a possibility of rain in Tamil Nadu, Puducherry and Karaikal.

No comments:

Post a Comment