Thursday, 23 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 24.01.2025 (வெள்ளி)


இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 24.01.2025 (வெள்ளி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) குடிமைப் பணித் தேர்வுகளுக்கு (ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகள்) பிப்ரவரி 11 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://upsc.gov.in/

2) 979 காலி பணியிடங்களுக்கு குடிமைப் பணித் தேர்வு மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.

3) தில்லியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்துத் தமிழகத்தில் நடைபெற இருக்கும் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

4) தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

5) மகாராஷ்டிரத்தில் தொடர்வண்டி மோதி 12 பயணிகள் உயிரிழந்தனர்.

6) ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்ற சொத்து மதிப்பு 5500 லட்சம் கோடி என ஆக்ஸ்பாம் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

7) புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 60,200 ரூபாயை எட்டியது.

English News

1) Applications for civil service exams (IAS, IPS etc.) can be made till February 11.

2) Civil service exams for 979 vacant posts are scheduled to be held on May 25.

3) Minister Anbil Mahesh Poyyamozhi met President of India about the diamond jubilee of Bharat Scout in Delhi.

4) The Union Cabinet has approved the extension of the National Health Mission for another five years.

5) 12 passengers died in a train accident in Maharashtra.

6) The value of the property taken out of India by the British during their rule was 5500 lakh crores, according to Oxfam research organization.

7) The price of a sovereign of gold reached a new high of 60,200 rupees.

No comments:

Post a Comment