Friday, 31 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 01.02.2025 (சனி)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 01.02.2025 (சனி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) 24 மாநிலங்கள் மற்றும் 4 நாடுகள் பங்கேற்கும் பாரத சாரண சாரணியர் ஒற்றுமைப் பேரணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

2) தமிழக முதல்வர் வடசென்னை வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

3) ஆண்டுக்கு 15 லட்சம் வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் வருகின்றனர்.

4) சென்னையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சொகுசு பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

5) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

6) செயற்கை நுண்ணறிவில் விரைவில் இந்தியாவுக்கான தற்சார்பு மாதிரிகள் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

7) ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு சவரன் தங்கம் 61,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8) அமெரிக்காவில் ஹெலிகாப்டரும் விமானமும் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.

9) அமெரிக்காவின் விமானப் பயணம் பாதுகாப்பானது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

English News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi flagged off the Bharat Scout Rally, in which 24 states and 4 countries are participating, by waving the flag.

2) Tamil Nadu Chief Minister inspected the development works in North Chennai.

3) 15 lakh foreigners come to Tamil Nadu every year for medical treatment.

4) The Metropolitan Transport Corporation has decided to operate luxury buses in partnership with private companies in Chennai.

5) Union Finance Minister Nirmala Sitharaman will present the country's budget in Parliament today.

6) Union Information and Communications Minister Ashwini Vaishnav has said that autonomous models for India will soon be created in artificial intelligence.

7) The price of a sovereign of gold jewelry has reached a new high. One sovereign of gold is being sold for 61,840.

8) 67 people died in a helicopter and plane collision in the United States.

9) Donald Trump has said that air travel in the United States is safe.

No comments:

Post a Comment