2025 இல் அமலாகும் RBI இன் முக்கிய அறிவிப்புகள்!
2025
ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் சில முக்கிய அறிவிப்புகள்
அமலாக இருக்கின்றன. அவையாவன,
1) கடன்
பெறுவதற்கான கடன் தகவல் மதிப்பெண் (கிரெடிட் ஸ்கோர்) 15 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.
முன்பு இது 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டது.
2) நிதி
நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஒருவரின் கடன் தகவல் மதிப்பெண்ணை (கிரெடிட் ஸ்கோரை) அறியும்
பட்சத்தில் அது குறித்த தகவலைத் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம்
அளிக்க வேண்டும்.
3) வாடிக்கையாளர்களின்
கடன் தகவல் மதிப்பெண் (கிரெடிட் ஸ்கோர்) தொடர்பான புகார்களை 30 நாட்களுக்குள் தீர்க்க
வேண்டும். அது முடியாத பட்சத்தில் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு
ரூ. 100 வீதம் வழங்க வேண்டும்.
4) வாடிக்கையாளர்கள்
விண்ணப்பிக்கும் கடன் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அது குறித்த சரியான காரணங்களை வங்கிகள்
மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
5) 10,000
ரூபாய்க்கும் குறைவான நிரந்தர வைப்புத் தொகையை (பிக்சட் டெபாசிட்) முதிர்வுக் காலத்திற்கு
முன்பே வாடிக்கையாளர்கள் முடித்துக் கொள்ள விரும்பினால் வட்டியின்றிப் பணத்தைத் திரும்ப
வழங்க வேண்டும்.
4)
10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட நிரந்தர வைப்புத் தொகையை (பிக்சட் டெபாசிட்) முதிர்வு
காலத்திற்கு முன்பே வாடிக்கையாளர்கள் முடித்துக் கொள்ள விரும்பினால் ஐந்து லட்சம் அல்லது
முதலீட்டுத் தொகையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அதை வட்டியின்றி வழங்க வேண்டும்.
5) நிரந்தர
வைப்புத் தொகை முதலீட்டை (பிக்சட் டெபாசிட்) ஆரம்பித்த பத்து மாதங்களுக்குப் பிறகு
திரும்ப பெற விரும்பினால் முதல் மூன்று மாதங்களுக்கு வட்டியின்றியும், மற்ற மாதங்களுக்கு
அனுமதிக்கப்படும் வட்டி வீதத்திலும் முதலீட்டை வழங்க வேண்டும்.
6) இயற்கை
சீற்றம் காரணமாகவோ அல்லது மருத்துவ அவரச சிகிச்சை காரணமாவோ நிரந்த வைப்புத் தொகை முதலீட்டைத்
(பிக்சட் டெபாசிட்) திரும்பப் பெற விரும்பினால் முழு பணத்தையும் வாடிக்கையாளர்களுக்கு
வட்டியின்றி வழங்க வேண்டும்.
வங்கிகள்
மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பான இத்தகவல்களை அறிந்து வைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு
மிகுந்த பயன் தருவதாகும்.
*****
No comments:
Post a Comment