Showing posts with label 8th Maths Revision. Show all posts
Showing posts with label 8th Maths Revision. Show all posts

Friday, 11 April 2025

எட்டாம் வகுப்பு – மூன்றாம் பருவம் – கணக்கு - திருப்புதல் & மீள் பார்வை

எட்டாம் வகுப்புமூன்றாம் பருவம்கணக்கு

திருப்புதல் & மீள் பார்வை

I. எண்கள்

1) -½  மற்றும் 3/5 இடையே ஐந்து விகிதமுறு எண்களைக் காண்க.

2) 17956 இன் வர்க்கமூலம் காண்க.

3) 9261 இன் கனமூலம் காண்க.

4) -2 மற்றும் 0 இடையே ஐந்து விகிதமுறு எண்களைக் காண்க.

5) 288369 இன் வர்க்கமூலம் காண்க.

6) 1728 இன் கனமூலம் காண்க.

 

II. அளவைகள்

1) 21 செ.மீ ஆரம், 1200 மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம், சுற்றளவு, பரப்பளவு ஆகியவற்றைக் காண்க.

2) 120 மீ ஆரமுள்ள வட்டமானது 8 சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் வில்லின் நீளத்தைக் காண்க.

3) நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவு காண்க.

4) முகங்கள் 12, உச்சிகள் 20, விளிம்புகள் 30 உடைய ஒரு கன வடிவத்திற்கான ஆய்லரின் சூத்திரத்தைச் சரிபார்க்க.

 

III. இயற்கணிதம்

1) (2a + 5)3 இன் விரிவாக்கம் காண்க.

2) 1043 இன் மதிப்பு காண்க.

3) (2x + 3)(2x – 4) இன் பெருக்கற்பலன் காண்க.

4) (4m2n3 + 16m4n2 – mn) ÷ 2mn இன் மதிப்பு காண்க.

5)  x2 + 14x + 49 ஐக் காரணிப்படுத்துக.

6) -3(4x + 9) = 21 இன் தீர்வு காண்க.

7) அடுத்தடுத்த மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 75 எனில் அவ்வெண்களைக் காண்க. அவ்வெண்களில் பெரிய எண் எது?

8) தேன்மொழியின் தற்போதைய வயது முரளியின் வயதை விட 5 ஆண்டுகள் அதிகம் ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு தேன்மொழிக்கும் முரளிக்கும் இடையே இருந்த வயது விகிதம் 3 : 2 எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன?

9) y = 2x + 3 இன் வரைபடத்தை கட்டத்தாளில் வரைக.

 

IV. வாழ்வியல் கணிதம்

1) ஒரு பொருளை ரூ. 820க்கு விற்பதனால் விற்கும் விலையில் 10 சதவீத அளவு நட்டம் ஏற்படுகிறது எனில் அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.

2) ஒரு பொருளை ரூ. 810க்கு விற்பதால் கிடைக்கும் லாபமும் அதே பொருளை ரூ. 530க்கு விற்பதால் ஏற்படும் நட்டமும் சமம் எனில் அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.

3) ரூ. 3200க்கு 2.5 சதவீத ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் 2 ஆண்களுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க.

4) ரூ. 5000க்கு 8 சதவீத ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயான வித்தியாசம் காண்க.

5) 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?

 

V. வடிவியல்

1) பிதாகரஸ் தேற்றத்தைக் கூறுக.

2) 8, 15, 17 ஆகியன ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் ஆகுமா?

3) படத்தில் வானூர்திக்கும் கப்பலுக்கும் இடையே உள்ள தூரத்தைக் காண்க.

4) DE = 6 செ.மீ, EA = 5 செ.மீ, AR = 5.5 செ.மீ, RD = 5.2 செ.மீ, DA = 10 செ.மீ அளவுகள் கொண்ட DEAR எனும் நாற்கரம் வரைக.

5) BO = 7 செ.மீ, OA = 6 செ.மீ, BA = 10 செ.மீ, TA = 6 செ.மீ, BO மற்றும் TA இணைப்பக்கங்கள் என அமையுமாறு BOAT எனும் சரிவகம் வரைக.

6) BI = 6.5 செ.மீ, IR = 5 செ.மீ, BIR = 700 அளவுகள் கொண்ட BIRD எனும் இணைகரம் வரைக.

 

VI. புள்ளியியல்

1) பின்வரும் விவரங்களுக்கு நிகழ்வெண் பரவல் அட்டவணை தயார் செய்க.

328, 470, 405, 375, 298, 326, 276, 362, 410, 255, 391, 370, 455, 229, 300, 183, 283, 366, 400, 495, 215, 157, 374, 306, 280, 409, 321, 269, 398, 200.

2) பின்வரும் விவரங்களுக்கு வட்ட விளக்கப்படம் வரைக.

விவரங்கள்

உணவு

கல்வி

வாடகை

போக்குவரத்து

இதர

செலவுகள் %

50%

20%

15%

5%

10%

3) பின்வரும் விவரங்களுக்கு நிகழ்வுச் செவ்வகம் மற்றும் நிகழ்வுப் பலகோணம் வரைக.

பிரிவு

0 – 10

10 – 20

20 – 30

30 – 40

40 – 50

50 – 60

மாணவர் எண்ணிக்கை

5

15

23

20

10

7

 

 VII. தகவல் செயலாக்கம்

1) உங்களிடம் பள்ளிக்குக் கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகள், 3 வெவ்வேறு வண்ண நீர்ப்புட்டிகள் உள்ளது எனில் நீங்கள் பள்ளிக்குச் செல்லும் போது 1 கைப்பை மற்றும் 1 வண்ண நீர்ப்புட்டி கொண்டு செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளன?

2) 392, 256 இன் மீ.பொ.காவைத் தொடர் வகுத்தல் முறையில் காண்க.

3) 280, 420 இன் மீ.பொ.காவைத் தொடர் கழித்தல் முறையில் காண்க.

4) பிபனோசி எண் தொடர் வரிசையை 10 உறுப்புகள் வரை எழுதுக.

5) சீசர் மறைகுறியீடு அட்டவணை key=4 எழுதுக.

6) Additive Cypher (key=5) அட்டவணை எழுதுக.

7) அட்பாஷ் மறைகுறியீடு அட்டவணையை எழுதுக.

8) ரூ. 175க்கு 5 இனிப்புக் கட்டிகள் அல்லது ரூ. 114க்கு 3 இனிப்புக் கட்டிகள் – இவற்றில் எதை வாங்குவது சிறந்தது எனக் காண்க.

*****