Wednesday, 27 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.08.2025)

1) நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2) 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது குறித்து ஆய்வு நடத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3) பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உச்சநீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

4) தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் எண்ம முறையில் (டிஜிட்டல் முறையில்) வரி வசூலிக்க மதுரை உயர்நீதி மன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது.

5) அமெரிக்கா வரி விதிப்பை இந்தியா சமாளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

6) அவசர ஊர்திகளின் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

7) கோட்டூர்புரத்தில் சென்னை இதழியல் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

8) சென்னையில் 248 மகளிர் விடியல் பேருந்துகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

9) ஆண்டுதோறும் செப்டம்பர் 23 ஆம் தேதி ஆயுர்வேத தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

10) இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட புதிய வான்வெளி பாதுகாப்பு கேடய அமைப்புக்கு சுதர்சன சக்கரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

11) இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமல்படுத்தியது அமெரிக்கா.

12) ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்.

Education & GK News

1) Chief Minister M.K. Stalin launched the breakfast program in urban government-aided schools.

2) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that a study will be conducted on the closure of 207 government schools.

3) The Supreme Court has imposed an interim stay on the removal of flagpoles installed in public places.

4) The Madurai High Court bench has directed that taxes be collected in the corporation, municipality and town panchayats in Tamil Nadu in the digital mode.

5) Prime Minister Narendra Modi has expressed confidence that India will cope with the US tax.

6) The Tamil Nadu government has warned that strict action will be taken if there is an attack on ambulances.

7) Chief Minister M.K. Stalin launched the Chennai Journalism Institute in Kotturpuram.

8) The Chief Minister launched 248 women's free buses in Chennai.

9) The Central Government has announced that September 23rd will be celebrated as Ayurveda Day every year.

10) The new air defense shield system developed in India has been named Sudarshan Chakra.

11) The US has implemented a 50 percent tax on Indian goods.

12) 33 people died in severe floods and landslides in Jammu and Kashmir.

No comments:

Post a Comment