Showing posts with label Chennai Book Fair 2026. Show all posts
Showing posts with label Chennai Book Fair 2026. Show all posts

Wednesday, 7 January 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.01.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.01.2026)

1) சென்னை, புழல் பகுதியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்களுக்கான பல்வகைத் திறன் பூங்காவைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

2) இன்று 49 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

3) முதல் முறையாக இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

4) தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

5) இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

6) பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

7) தமிழகத்திற்கு நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்காக ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

8) உத்திரப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிறந்தவர்கள்

1) ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking, 1942) : நவீன இயற்பியலின் மாமேதை மற்றும் அண்டவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இன்று பிறந்தார். (குறிப்பிடத்தக்கது: கலிலியோ மறைந்த அதே நாளில் இவர் பிறந்தார்).

2) எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley, 1935) : 'ராக் அண்ட் ரோல்' இசையின் மன்னன் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகர் எல்விஸ் பிரெஸ்லி பிறந்த தினம் இன்று.

இன்று மறைந்தவர்கள்

1) கலிலியோ கலிலி (Galileo Galilei, 1642) : நவீன வானியலின் தந்தை என்று அழைக்கப்படும் இத்தாலிய வானியலாளர் கலிலியோ மறைந்த தினம் இன்று.

2) கேசவ சந்திர சென் (1884) : இந்தியச் சமூக சீர்திருத்தவாதி மற்றும் பிரம்ம சமாஜத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் மறைந்த தினம் இன்று.

3) பிமல் ராய் (1966) : இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பிமல் ராய் மறைந்த தினம் இன்று.







Education & GK News

1) Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poyyamozhi inaugurated a multi-skill park for differently-abled students in the Puzhal area of ​​Chennai.

2) Tamil Nadu Chief Minister M.K. Stalin is inaugurating the 49th Chennai Book Fair today.

3) For the first time, free entry is being provided to the Chennai Book Fair this year.

4) The Tamil Nadu cabinet approved the Tamil Nadu Assured Pension Scheme.

5) The Pongal gift hamper distribution begins today.

6) 38,175 special buses are being operated for the Pongal festival.

7) An orange alert has been issued for heavy rainfall in Tamil Nadu for tomorrow and the day after.

8) 2.89 crore voters have been removed from the draft electoral roll published in Uttar Pradesh.

Birthdays Today

1) Stephen Hawking (1942): Stephen Hawking, the great genius of modern physics and a cosmologist, was born today. (Notably: He was born on the same day that Galileo died).

2) Elvis Presley (1935): Today is the birthday of Elvis Presley, the famous American singer known as the 'King of Rock and Roll'.

Deaths Today

1) Galileo Galilei (1642): Today is the death anniversary of Galileo, the Italian astronomer known as the father of modern astronomy.

2) Keshab Chandra Sen (1884): Today is the death anniversary of Keshab Chandra Sen, an Indian social reformer and one of the prominent leaders of the Brahmo Samaj.

3) Bimal Roy (1966): Today is the death anniversary of Bimal Roy, one of the greatest directors of the Indian film industry.

Sunday, 7 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.12.2025)

1) மின்னணு துறையில் இந்தியாவின் தலைநகராகத் தமிழகம் மாறியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2) தொடர் மழையால் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

3) தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி டிசம்பர் 11 இல் துவங்குகிறது.

4) தெற்காசியாவில் பெய்த கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1750 ஐக் கடந்தது.

5) கோவாவில் இரவு கேளிக்கை விடுதியில் எரிவாயு உருளை (சிலிண்டர்) வெடித்ததில் 25 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

6) இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்தாவதால் விமான கட்டணங்கள் ஆறு மடங்கு அதிகமாயுள்ளன.

7) வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்கியிருக்கலாம் என மத்திய அரசு அறிவுத்துள்ளது.

8) தமிழகத்தில் ஆறு நாட்களக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

9) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றது.








Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has proudly stated that Tamil Nadu has become the capital of India in the electronics sector.

2) Dengue incidence has increased in Tamil Nadu due to continuous rains.

3) The work of checking electronic voting machines across Tamil Nadu will begin on December 11.

4) The death toll due to heavy rains in South Asia has crossed 1750.

5) 25 people were killed in a gas cylinder explosion at a nightclub in Goa. Many were seriously injured.

6) Airfares have increased six times due to cancellation of IndiGo flights.

7) Former Bangladesh Prime Minister Sheikh Hasina can stay in India as long as she wants, the Central Government has informed.

8) There is a possibility of moderate rain in Tamil Nadu for six days.

9) India won the one-day cricket match against South Africa.