Showing posts with label continuous study. Show all posts
Showing posts with label continuous study. Show all posts

Thursday, 20 July 2023

மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான NPTEL

மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான NPTEL

மருத்துவம் மற்றும் பொறியியல் பயிலும் மாணவர்கள் தங்கள் திறனைக் கூடுதலான சான்றிதழ் படிப்புகளால் மேம்படுத்திக் கொள்ள NPTEL (National Programme on Technology Enhanced Learning) இணையதளத்தின் மூலம் இணைய வழியில் (Online) படிக்கலாம். அத்துடன் GATE, TOEFL, IELTS போன்ற தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி பெறலாம்.

இணைய வழியிலான இவ்வித ஒரு சான்றிதழ் படிப்பில் தேர்வெழுதித் தேர்வு பெற ரூ.1000/- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இச்சான்றிதழ் படிப்புகளை இந்தியாவின் பிரபலமான ஐ.ஐ.டி.(IIT)கள் வழங்குகின்றன என்பதிலிருந்து இப்படிப்பின் தரத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஐ.ஐ.டி.யில் பாடம் நடத்தும் பேராசிரியர்களின் சிறப்பான கற்பித்தல் அடங்கிய காணொளிகள் மூலமாக நீங்கள் பயிலலாம்.

மருத்துவத்தில் பொறியியலில் ஆர்வமுள்ள பனிரெண்டாம் வகுப்பு முடித்தோர் தொடங்கி மருத்துவம் பொறியியல் படிப்போர் வரை, படித்து முடித்தோர் உட்பட அனைவரும் இவ்விணையதளம் மூலமாகக் கற்றுப் பயன் பெறலாம். தங்கள் திறன்களையும் தகுதிகளையும் அதிகரித்துக் கொள்ளலாம். உலகளாவிய வாய்ப்புகளைப் பெற்று உயர் நிலைக்கும் உயர் பதவிகளுக்கும் சர்வதேச ஆய்வுகளுக்கும் செல்லாம். இத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதுடன் தகவல் தேவையுள்ள மற்றோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். இத்தளத்தை அடைய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://nptel.ac.in/

*****