Saturday, 21 December 2024

மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி – வினா போட்டி - வினா விடைகள்

மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி – வினா போட்டி

வினா விடைகள்

1) ‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி’ – என்று பாடியவர் யார்?

ஔவையார்.

2) “ஞாலம் கருதினும் கைகூடும்

அவனும் நானும் ஒரு கட்சி

காலம் பதில் சொல்லட்டும்

நான் கடலை எரித்த தீக்குச்சி”

-          என்று வள்ளுவருக்கும் தனக்கும் உள்ள தொடர்பைப் பாடியவர் யார்?

வைரமுத்து.

3) ‘பேராண்மை’ என்ற சொல் இடம் பெறும் அதிகாரங்களுள் ஒன்று எது?

மானம்.

4) குறளோவியம் நூலில் எத்தனை குறள்களுக்குச் சொல்லோவியம் தீட்டப்பட்டுள்ளது?

354 குறட்பாக்கள்.

5) “அவியுணவு” – இலக்கணக் குறிப்பு?

இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

6) அரியவற்றுள் எல்லாம் அரிது எது?

பெரியார் துணை.

7) “திருக்குறள் உப்பைப் போல எளிமையானது; வைரத்தைப் போல கடினமானது” – எனக் கூறியவர் யார்?

கி.ஆ.பெ. விசுவநாதம்.

8) ஆங்கில ஆண்டோடு எத்தனை ஆண்டிக் கூட்டி திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படும்?

31.

9) திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

1812.

10) ‘நெடுநீர் மறவி’ என்பதில் வரும் நெடுநீர் என்பதன் பொருள்

காலம் தாழ்த்துதல்.

11) திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?

7.

12) திருக்குறளைத் தகப்பன் தந்த தாய்ப்பால் என்று வர்ணித்தவர் யார்?

அறிவுமதி.

13) திருக்குறள் புதைபொருள், வள்ளுவர் உள்ளம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

கி.ஆ.பெ. விசுவநாதம்.

14) அறம் பொருள் இன்பம் ………… நான்கின் திறம் தெரிந்து தேறப் படும்.

உயிரச்சம்.

15) ஈத்து உவக்கும் இன்பம் அறியாதவர் யார்?

வன்கண்மை உடையவர்.

16) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர்.

17) ‘அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும்’ – இலக்கணக் குறிப்பு யாது?

உவமேயம்.

18) ‘குறள் வானம்’ -  நூல் ஆசியர் யார்?

சுப. வீரபாண்டியன்.

19) சான்றாண்மையின் தூண்களில் ஒன்றைச் சுட்டுக.

உண்மை.

20) திருக்குறள் – இன்பத்துப் பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெண் எழுத்தாளர் யார்?

மீனா கந்தசாமி.

21) ‘வள்ளுவம்’ எனும் நூல் ஆசிரியர் பெயர் தேர்க.

வ.சுப. மாணிக்கனார்.

22) திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?

வீரமா முனிவர்.

23) வன்மையுள் வன்மை என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?

பொறுமை.

24) ஆட்சியாளர்களின் கண் எது?

நீதி உரைக்கும் நூல்.

25) ‘கடிதொச்சி மெல்ல எறிக’ – எந்த அதிகாரத்தில் இடம் பெறும் தொடர்?

வெருவந்த செய்யாமை.

26) உப்பமைந்தற்றால் என்று வள்ளுவர் கூறுவதில் உப்பு எதனைக் குறிக்கும்?

ஊடல்.

27) பழைமை என்பது எதனைக் குறிக்கும் குறட்சொல்?

நட்பு.

28) பிழையற்ற சொல் தேர்க.

நோற்பார்.

29) ‘முயற்சி திருவினை ஆக்கும்’ – எந்த அதிகாரத் தொடர்?

ஆள்வினையுடைமை.

30) ஞாட்பு – பொருள் யாது?

போர்க்களம்.

31) சரியான வரியைத் தேர்ந்தெடுக்க.

யாதனின் யாதனின் நீங்கியான்.

32) தமிழுக்குக் கதி என்று கம்பனையும் திருவள்ளுவரையும் சுட்டியவர் யார்?

செல்வக்கேசவராயர்.

33) ‘வேலொடு நின்றான்’ – என்பதில் வேலொடு நின்றவரைக் குறிப்பது?

கள்வர்.

34) அரசர்க்குரிய பண்பாக வள்ளுவவர் சுட்டிக் காட்டாதது?

வீரம்.

35) ‘ஊழ்’ என்பதன் பொருள்?

வினைச்செயல்.

36) முயற்சி சிறப்புடையோரை விட மேம்பட்டவர் யார்?

இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர்.

37) பிழைகள் இல்லாததைத் தேர்ந்தெடுக்க.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

38) ‘ஓம்பல்’ என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?

தொழிற்பெயர்.

39) “தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே …” – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி?

வேற்றுமையணி.

40) “The Crocodile prevails in its own flow of water wide

If this it leaves, this slain by anything beside” – குறட்பா அமைந்துள்ள அதிகாரம்?

இடனறிதல்.

41) ‘வழக்கு’ என்னும் சொல்லின் பொருள் யாது?

நன்னெறி.

42) திருக்குறள் அதிகாரத் தலைப்பில் அமைந்த மு. வரதராசனார் எழுதிய புதினம் எது?

கயமை.

43) வலிமையுள் சிறந்த வலிமையாகக் கருதப்படுவது?

அறிவிலார் செய்யும் தீங்கைப் பொறுத்தல்.

44) ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் ……….

ஊற்றுக்கோல்.

45) ‘திண்மை’ – இலக்கணக்குறிப்பு?

பண்புப் பெயர்.

46) சீர்களைச் சரியாக வரிசைப்படுத்தியதைத் தேர்ந்தெடுக்க.

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

47) பிழையற்ற தொடர் தேர்க.

இறந்தார் வாய் இன்னாச்சொல்.

48) மரத்தற்றால் – பிரித்தெழுதுக.

மரம் + அத்து + அற்றால்.

49) தலைவியின் கண்களில் உள்ள மறுநோக்கு யாது?

மருந்து.

50) வாழும் வள்ளுவம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

டாக்டர் வா.செ.குழந்தைசாமி.

*****

No comments:

Post a Comment