பயத்தை வெல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!
ஏன்
பயத்தை வெல்ல வேண்டும் தெரியுமா?
இலக்குகளை
அடைய திறமையின்மை ஒருபோதும் காரணமாக இருப்பதில்லை. நம்பிக்கையின்மைதான் காரணமாக இருக்கிறது.
இந்த
நம்பிக்கையின்மையை உருவாக்கும் எதிரி பயம்தான்.
எனவே,பயத்துடன்
சண்டையிட்டு அதை வெல்லுங்கள்.
எதற்காகப்
பயப்படுகிறோம்?
சரியான
முடிவை எடுக்காமல் போய் விடுவோமோ, வாழ்க்கையில் தோல்வி அடைந்து விடுவேமோ என்றெல்லாம்
பயப்படுகிறது.
ஒரு
வேளை தோற்று விட்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த உலகத்தை எதிர்கொள்வது, மற்றவர்கள்
நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துப் பயப்படுகிறோம்.
ஆனால்
நீங்கள் பயப்படவே வேண்டியதில்லை.
நீங்கள்
வாழும் உலகில் உங்களுடைய எதிரியைப் பற்றியும், உங்களைப் பற்றியும் தெளிவாகப் புரிந்து
கொண்டிருந்தால் நீங்கள் செய்யப் போகும் சண்டையின் முடிவு எப்படி இருக்குமோ என நீங்கள்
பயப்பட வேண்டியதில்லை.
ஆகவே,
நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்.
ஏனென்றால்,
பயம்
என்பது நம் வாழ்க்கையை ஓர் அனுபவமாகப் பார்த்து வாழ விடாமல், நமக்குள் ஒரு போர்க்களத்தை
உருவாக்கி விடுகிறது. ஒரு காலத்தில் பயம் என்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்
விசயமாக இருந்தது. இன்றைக்கு பயம் நம்முடைய சுதந்திரத்துக்குத் தடை போடும் எதிரியாக
உருவாகி விட்டது.
இதனாலேயே
இந்தத் தடைகளை எதிர்கொள்ளும் பலரும் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை இழந்து எந்த
ஒரு காரியத்தையும் இறுதி வரை செய்து முடிக்காமல் பாதியிலிலேயே கைவிட்டு விடுகின்றனர்.
நீங்களும்
அப்படி எதையும் கைவிட்டு விடக் கூடாது இல்லையா?
வாழ்க்கையில்
நாம் ஓரளவு வெற்றி கண்ட பின்னும் கூட நாம் தகுதியான மனநிலையில் இல்லாவிட்டால் மகிழ்ச்சியாக
இருக்க முடியாது. ஏனென்றால் நம்முடைய மனம் சரியாக இல்லாவிட்டால் நமக்குத் திருப்தி
என்பது கிடைக்காது. இன்னும் சொல்லப் போனால் இந்த உலகில் நிறைய பேர் அபரிமிதமான திறமையுடன் நல்ல குணங்களுடன் வெற்றிகரமான
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் மனத்திருப்தி இல்லாமலேயே
வாழ்கிறார்கள்.
நீங்களும்
அப்படி மனத்திருப்தி இல்லாமலேயே வாழலாமா?
உங்கள்
வாழ்க்கையையே பாருங்கள். உங்கள் திறமைக்கேற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலுமே
என்னடா இந்த வாழ்க்கை என்ற எண்ணம் அவ்வபோது வந்து போகிறதா? அப்படி வந்து போனால் அது
சரியான வாழ்க்கை இல்லை.
அப்படியானால்,
சரியான வாழ்க்கையை எப்படி வாழ்வது?
பயமே
சாதனைகளைச் செய்ய விடாமல் தடுக்கிறது. இலக்குகளையும் கனவுகளையும் அடைவதற்கான தடைகளை
உருவாக்குகிறது. இதனாலேயே எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவது என்பது சிலருக்கு மட்டுமே
உரித்தானது என்று நினைத்துக் கொள்கிறோம்.
வாழ்க்கை
என்பது நாம் எடுக்கும் முடிவுகளால் ஆனது எனில் பயந்து செயலற்றுக் கிடப்பதும் நாம் எடுக்கும்
முடிவுதானே?
பயத்தை
எதிர்கொள்ள நாம் மற்றவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும். யாரும் நம்மை வழிநடத்திச்
செல்ல அனுமதிக்கக் கூடாது.
நாம்
உருவாக்க வேண்டும். யாரோ உருவாக்கியதை நாம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாது.
பிரச்சனைகளைத்
தீர்ப்பவராக இருக்க வேண்டும்.
இதில்
பிரச்சனை, அதில் பிரச்சனை என்று குறை கூறுபவராக இருக்கக் கூடாது. இதன் மூலம் மன உளைச்சல்,
அழுத்தம், ஏக்கம், வலி, காயப்படுதல், சோகம் என அனைத்தும் நம்மை விட்டு விலகிச் செல்லும்.
பயமில்லா மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
இந்த
உலகில் வெற்றி பெற்றவர்கள் யார் தெரியுமா?
வாழ்க்கையில்
வெற்றி பெற்ற அனைவருமே தடைகளை உடைத்து முன்னேறத் தெரிந்தவர்களே.
தடைகளைத்
தடைகளாகப் பார்க்க எது காரணமாகிறது?
பயம்தான்.
பயம் நம்முடன் போரிட்டு நம்முடைய நம்பிக்கைகளை வீழ்த்தி விடுகிறது. இந்தக் காரியத்தை
நம்மால் செய்ய முடியுமா என்கிற ரீதியில் சிந்திக்க வைத்து விடுகிறது. இந்தச் சிந்தனையின்
காரணமாகத் தோல்வி குறித்த அச்சம் கொள்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்ய தயங்குகிறோம்.
இதனால் எந்தக் காரியத்தையும் ஆரம்பித்த உடனேயே வரும் சின்ன சின்ன தடைகளையும் சவால்களையும்
கண்டு கலங்கி உடனடியாக முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறோம்.
இவ்வளவு
கூறியும் பயப்படுவதை நிறுத்த முடியவில்லை என்றால் அதற்குக் காரணமென்ன தெரியுமா?
பயப்படுவது
மனித இயல்பு. பயத்தை வெல்வது ஒன்றே இதற்கான வழி. பயத்தை வெல்ல நாம் ஏன் பயப்படுகிறோம்?
நமக்குள்ளே தோன்றும் பயம் என்ற எதிரியை வெல்ல வேண்டிய போர் வீரன் நாமேதான், வேறு யாருமல்ல.
ஓர்
போர் வீரனாய் உங்களுக்குள் இருக்கும் பயத்தை வெல்லுங்கள். பிறகு நீங்கள் இந்த உலகையே
வெல்வீர்கள்.
நீங்கள்
உலகை வெல்ல வாழ்த்துகள்!
*****
No comments:
Post a Comment