இன்றைய தமிழ் & ஆங்கிலச்
செய்திகள் – 04.12.2024 (புதன்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பிரதமர்
முதல்வரிடம் கேட்டறிந்தார்.
2) புயல் பாதிப்பு மற்றும் வேள்ளச் சேத பாதிப்பிற்கு இடைக்கால நிவாரணமாக 2000 கோடி வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3) விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
கடலூர் மாவட்டங்களில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 ரூபாய்
நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
4) பெஞ்சல் புயலால்
சேதமடைந்த குடிகைளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமும், பெஞ்சல் புயலால் உயிரிழந்தோரின்
குடும்பங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
5) பெஞ்சல் புயல் பாதிப்புகளால் இதுவரை 12 பேர்
உயிரிழந்துள்ளனர்.
6) திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
7) தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் புதுச்சேரி கடலூர்
இடையிலான போக்குவரத்து மூன்று நாட்களாகத்
துண்டிக்கப்பட்டுள்ளது.
8) வெள்ளம் பாதித்த 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த
டிசம்பர் 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
9) வலுவிழந்த பெஞ்சல் புயல் அரபிக் கடலை அடைந்தது.
10) டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய
இரு நாட்களுக்குத் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
11) கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான தனிநபர் கடனுக்கான உச்ச வரம்பு 20
லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
English News
1) The Prime Minister inquired from
the Chief Minister about the damage caused to Tamil Nadu by Cyclone Fengal.
2) The Chief Minister has requested
the Central Government to provide 2000 crores as interim relief for the damage
caused by the cyclone and crop damage.
3) The Chief Minister has announced
that a relief of Rs. 2000 will be provided to the families affected by Cyclone
Fengal in Villupuram, Kallakurichi and Cuddalore districts.
4) The Chief Minister has announced
that a relief of Rs. 10,000 will be provided to the houses damaged by Cyclone
Fengal and a relief of Rs. 5 lakh will be provided to the families of those who
died in Cyclone Fengal.
5) 12 people have died so far due to
the effects of Cyclone Fengal.
6) The bodies of seven people trapped
in the Thiruvannamalai landslide have been recovered.
7) Traffic between Puducherry and
Cuddalore has been disrupted for three days due to the flooding in the
Thenpennai river.
8) The deadline for paying
electricity bills in the 6 flood-affected districts has been extended till
December 10.
9) Cyclone Fengal, which has
weakened, has reached the Arabian Sea.
10) The Tamil Nadu Legislative
Assembly session is scheduled to be held for two days on December 9 and 10.
11) The maximum limit for personal
loans for cooperative society members has been increased to Rs. 20 lakhs.
No comments:
Post a Comment