திருக்குறள் - தகவல் துளிகள்!
திருக்குறளில்
இடம் பெற்றுள்ள இரு மலர்கள் எவை?
அனிச்சம்,
குவளை.
திருக்குறளில்
இடம் பெற்றுள்ள ஒரே பழம் எது?
நெருஞ்சிப்
பழம்.
திருக்குறளில்
இடம் பெற்றுள்ள ஒரே விதை எது?
குன்றிமணி.
திருக்குறளில்
இடம் பெற்றுள்ள இரண்டு மரங்கள் எவை?
பனை,
மூங்கில்.
திருக்குறளில்
அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து எது?
னி.
திருக்குறளில்
ஒரே குறளில் அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ள சொல் எது?
பற்று.
திருக்குறளில்
ஒரே முறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ள இரு எழுத்துகள் எவை?
ளீ,
ங.
திருக்குறளில்
இடம் பெறாத இரண்டு சொற்கள் எவை?
தமிழ்,
கடவுள்.
நரிக்குறவர்கள்
பேசும் வக்ரபோலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் யார்?
கிட்டு
சிரோன்மணி.
‘திருவள்ளுவர்
திடுக்கிடுவார்’ என்ற நூலை எழுதியவர் யார்?
நாமக்கல்
வெ. இராமலிங்கம்.
‘திருக்குறள்
உரை விபரீதம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
சாமி.
தியாகராஜன்.
திருவள்ளுவமாலை
தொகுக்கப்பட்ட காலம் எது?
11 ஆம்
நூற்றாண்டு.
திருவள்ளுவமாலை
பாடிய புலவர்களின் எண்ணிக்கை எத்தனை?
53.
திருக்குறளைத்
திருத்த ஒப்புக் கொள்ளாது கோபப்பட்ட தமிழறிஞர் யார்?
பூவாளூர்
தியாகராஜ செட்டியார்.
தவறான
திருக்குறள் பிரதியை விலை கொடுத்து வாங்கி தீயிலிட்டவர் யார்?
பாண்டித்துரை
தேவர்.
திருக்குறளை
ஆங்கிலத்தில் முழுமையாக மொழி பெயர்த்த ஜி.யு. போப் பிறந்த நாடு எது?
கனடா.
ஜி.யு.போப்
மொழிபெயர்த்த திருக்குறள் யாருடைய நூலைத் தழுவியது?
பரிமேலழகர்
உரையைத் தழுவி சரவணப் பெருமாள் வெளியிட்ட நூல்.
டால்ஸ்டாய்
அடிக்கடி மேற்கோள் காட்டிய குறட்பாக்கள் யாவை?
1) சிறப்பீனும்
செல்வம் பெறினும் (குறள், 311)
2) செய்யாமல்
செற்றார்க்கும் இன்னாத செய்த பின் (குறள், 313)
பெர்னாட்சா
அடிக்கடி மேற்கோள் காட்டிய குறள் எது?
கொல்லான்
புலானை மறுத்தானை (குறள், 260)
இங்கர்சால்
அடிக்கடி மேற்கோள் காட்டி குறள் எது?
எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் (குறள், 423)
ஜெர்மனியின்
ஸ்கோபன்ஹவர் வியந்த குறள் எது?
மக்களே
போல்வர் கயவர் (1071)
*****
No comments:
Post a Comment