Wednesday, 18 December 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 19.12.2024 (வியாழன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 19.12.2024 (வியாழன்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) தமிழ்நாட்டில் சிறப்பு செஸ் அகாதெமி உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

2) தமிழகத்தைச் சேர்ந்த உலக சதுரங்க சாதனையாளர் குகேசுக்கு முதல்வர் 5 கோடி பரிசளித்துக் கௌரவித்தார்.

3) பேரிடர்கள் மேல் பழி போடாமல் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

4) இணைய வழியில் நீட் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

5) மருத்துவத் துறையில் அதிகப் பெண்கள் பயின்று வருவது இந்தியா வளர்ந்து வருவதைக் காட்டுவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

6) நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

7) சென்னை ஐசிஎப்புக்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வந்தே பாரத் தொடர்வண்டிகளைத் தயாரித்ததைப் பாராட்டி வழங்கப்படுகிறது.

English News

1) The Chief Minister has announced that a special chess Academy will be set up in Tamil Nadu.

2) The Chief Minister has honored the world chess champion from Tamil Nadu, Kukesh, with a prize of 5 crores.

3) The School Education Minister has advised that we should not blame disasters but live in harmony with nature.

4) Union Education Minister Dharmendra Pradhan has said that he is considering conducting the NEET exam online.

5) President Draupadi Murmu has said that the increasing number of women studying in the medical field shows that India is growing.

6) The Mettur dam is at the point of filling for the third time this year.

7) Chennai ICF is being given the National Energy Conservation Award. This award is given in appreciation for the production of Vande Bharat trains.

No comments:

Post a Comment