Showing posts with label proverbs. Show all posts
Showing posts with label proverbs. Show all posts

Tuesday, 17 March 2020

மருத்துவப் பழமொழிகள்

மருத்துவப் பழமொழிகள்

கோழைக்கு எதிர் தூதுவளை.
நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.
வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.
நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.
கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி

மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி.
குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.
சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.
கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.
அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.
காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.
ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.

தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.
வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.
கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.
நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.
விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.
விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.
ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.
வில்வம் பித்தம் தீர்க்கும்.

காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும்.
அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.