Wednesday, 20 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.08.2025)

1) அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியிலான வகுப்புகளுக்குக் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் அவசியம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

2) எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கு 50 விண்வெளி வீரர்களைத் தயார் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

4) குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் முதல்வர், பிரதமர், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

5) துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். சுதர்சன் ரெட்டி இன்று மனுதாக்கல் செய்கிறார்.

6) இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் காவிரியிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7) கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தார். மேலும் இருவர் நிலை கவலைக்கிடமாக  உள்ளது.

8) 40 மாடி கட்டட உயரத்தில் 75 டன் எடை கொண்ட ஏவுஊர்தியை (ராக்கெட்) உருவாக்கி வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

9) பாகிஸ்தானில் பொழிந்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 706 ஐ எட்டியது.

10) மகாராஷ்டிரத்தில் பெய்த கனமழையில் 8 பேர் உயிரிழந்தனர்.

11) ஜம்மு காஷ்மீர் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

12) தமிழகத்துக்கு ஆகஸ்ட் 25 வரை மழை வாய்ப்பு உள்ளது.

13) ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாட்டுத் தலைவர்களின் நேரடி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) The School Education Department has announced that a minimum of 15 students are required for English medium classes in government schools.

2) Prime Minister Narendra Modi has said that 50 astronauts should be prepared for future space projects.

3) The monsoon session of Parliament ends today.

4) A bill to remove the Chief Minister, Prime Minister and ministers from office if they are arrested in criminal cases and spend 30 days in jail has been introduced in Parliament.

5) C.P. Radhakrishnan, who is contesting the Vice Presidential election, filed his nomination. Sudarshan Reddy will file his petition today.

6) For the fifth time this year, the Mettur dam reached its full capacity of 120 feet. Due to this, 90 thousand cubic feet of water is being released from the Cauvery. A flood warning has been issued for the people along the banks of the Cauvery.

7) A girl infected with amoebic encephalitis died in Kerala. The condition of two others is critical.

8) The Indian Space Research Organisation (ISRO) has said that it is developing a 75-tonne rocket as tall as a 40-storey building.

9) The death toll due to heavy rains in Pakistan has reached 706.

10) 8 people have died in heavy rains in Maharashtra.

11) The death toll in the floods in Jammu and Kashmir has increased to 64.

12) There is a possibility of rain in Tamil Nadu till August 25.

13) Donald Trump has said that arrangements are made between the  talks of two leaders of the Russia and Ukraine.

No comments:

Post a Comment