Monday, 6 January 2025

HMPV என்றால் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

HMPV என்றால் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

HMPV என்பது Human Meta Pneumo Virus என்பதன் சுருக்கமாகும்.

இந்த தீநுண்மி (வைரஸ்) முதன் முதலில் நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது.

2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில், தற்போது சீனாவில் அதிகம் பரவி வரும் இந்த தீநுண்மி (வைரஸ்) இந்தியாவிலும் பரவி வருகிறது.

HMPV தீநுண்மி (வைரஸ்) யாரை அதிகம் பாதிக்கும் என்றால்,

14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்,

65 வயதுக்கு  மேல் உள்ள முதியவர்கள்,

சுவாச கோளாறு உள்ளவர்கள்,

நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோரை இந்த தீநுண்மி (வைரஸ்) அதிகம் பாதிக்கிறது.

இந்த தீநுண்மி (வைரஸ்) பாதிப்பின் அறிகுறிகள் என்னவென்றால்,

இருமல்,

சளி,

காய்ச்சல்,

தலைவலி,

தொண்டை வலி,

மூச்சடைப்பு,

மூக்கில் சளி வழிதல்,

மூச்சுத் திணறல்,

சுவாசிப்பதில் சிரமம்,

உடல் சோர்வு,

நடக்கும் போது தலைசுற்றல் ஆகியன இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

இத்தீநுண்மி பாதிப்புக்கான சிகிக்சை முறைகள் என்னவென்றால்,

இதுவரை இத்தீநுண்மி பாதிப்புக்கான முறையான சிகிச்சையோ, தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ கண்டறியப்படவில்லை.

காய்ச்சல், சளிக்கு வழங்கப்படும் மருத்துவமே இந்நோய் பாதிப்பிற்கு அளிக்கப்படுகிறது. அத்துடன் வலி நிவாரணி மருந்துகளும் சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது.

இந்நோய் பாதிப்பு கண்டவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீண்ட நாட்கள் இந்நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெறுவது நலமாகும்.

No comments:

Post a Comment