கூகுள் BARD பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!
வரப் போகிற காலம் செயற்கை
நுண்ணறிவின் (Artificial Intelligence) காலம். Chat GPT இதில் முன்னணியில் போய்க் கொண்டு
இருக்கிறது. அதற்காக தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் சும்மா இருக்குமா? அதுவும்
Chat GPTக்குப் போட்டியாக BARD என்ற செயற்கை நுண்ணறிவுக்கான பரிசோதனைத் தளத்தைக் கட்டமைத்து
வருகிறது. Chat GPT ஐ நீங்கள் பயன்படுத்துவதைப் போல கூகுள் BARD யும் நீங்கள் பயன்படுத்திப்
பார்க்கலாம்.
BARD தளத்தில் நீங்கள் புதிய
உலாத்தலைச் (New Chat) செய்து பார்க்கலாம். உங்கள் வினாக்கள் அல்லது சந்தேகங்களை
Enter a prompt here என்பதில் தட்டச்சு செய்தோ அல்லது குரல் வழியாக Microphone
Option மூலமாகவோ உள்ளீடு செய்து BARDஉடன் நீங்கள் உரையாடலாம், விவாதிக்கலாம், தேவையான
பதில்களைப் பெறலாம்.
BARD உடன் நிகழ்த்திய அதே
உரையாடல்களையும் வினாக்களையும் Chat GPT உடனும் நீங்கள் செய்து பாருங்கள். இரண்டுக்கும்
வித்தியாசம் இருக்கிறது. Chat GPT ஒருபடி மேலே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இருந்தாலும் கூகுள் BARDஐ மேம்படுத்தவே செய்யும்.
இன்னும் சில நாட்களில்
Chat GPTஐ கூகுளின் BARD விஞ்சலாம். யார் கண்டது? எது எப்படியே நீங்கள் BARDலும் ஒரு
பார்வை பார்த்து விடுங்களேன். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்த்து BARDஇல் உங்கள்
அனுபவங்கள் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
*****
No comments:
Post a Comment