Monday 3 July 2023

கனங்களிலும் வர்க்கங்களிலும் ஒளிந்திருக்கும் அழகு!

கனங்களிலும் வர்க்கங்களிலும் ஒளிந்திருக்கும் அழகு!

கனங்களை வரிசைத் தொடராகக் கூட்டிப் பார்த்திருக்கிறீர்களா? அதாவது கனங்களின் கூட்டு வரிசைத் தொடர் எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கிறீர்களா?

முதலில் ஒன்று மற்றும் இரண்டின் கனங்களைக் கூட்டிப் பார்ப்போமா?

13 + 23 = 1 + 8 = 9

ஒன்று மற்றும் இரண்டின் கனங்களின் கூடுதல் ஒன்பதாக வருகிறதா? அந்தக் கனங்களின் கன மூலங்களான ஒன்றையும் இரண்டையும் கூட்டினால் மூன்றுதானே? இந்த மூன்றின் வர்க்கம் ஒன்பதுதானே. இப்போது கனங்களுக்கும் வர்க்கங்களுக்கும் இப்படி ஒரு தொடர்பு உண்டாவதைப் பாருங்கள்.

13 + 23  = 9 = 32

இந்தத் தொடர்பானது அதாவது கனங்களின் கூடுதலுக்கும் வர்க்கங்களுக்கும் உள்ள தொடர்பு இப்படி அமைகிறது அல்லவா!

13 + 23  = (1 + 2)2 = 32

அப்படியானால் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய கனங்களின் கூடுதலானது அவற்றின் கன மூலங்களான ஒன்று, இரண்டு மற்றும் மூன்றின் கூடுதலான ஆறின் வர்க்கமாக அமையுமா என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?

அதையும் சோதித்துப் பார்த்து விடுவோமே!

13 + 23 + 33 = 1 + 8 + 27 = 36 = 62

அதாவது,

13 + 23 + 33 = (1 + 2 + 3)2 = 62

சரியாகத்தானே அமைகிறது.

இப்போது ஒன்றிலிருந்து நான்கு வரையுள்ள கனங்களின் கூடுதலைப் பார்த்தால் அது அவற்றின் கன மூலங்களான ஒன்றிலிருந்து நான்கு வரை கூட்டினால் வரும் பத்தின் வர்க்கமாகத்தானே அமைய வேண்டும். இதையும் சோதித்து விடுவோமா?

13 + 23 + 33 + 43 = 1 + 8 + 27 + 64 = 100 = 102

அதாவது,

13 + 23 + 33 + 43 = (1 + 2 + 3 + 4)2 = 102

இதிலிருந்து ஒன்றிலிருந்து தொடங்கும் கன எண்களின் கூடுதல் ஒன்றிலிருந்து அவற்றின் கன மூலங்களின் கூடுதலின் வர்க்கமாக அமைகிறது என்ற உண்மையைப் பெறுகிறோம் அல்லவா!

இதைப் பொதுமைப்படுத்தி இப்படிக் குறிப்பிடலாம்தானே?

13 + 23 + 33 + … + n3 = (1 + 2 + 3 + … + n)2

என்ன ஓர் அழகு பாருங்கள் கனங்களுக்கும் வர்க்கங்களுக்கும்!

இந்த அழகைக் காண்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறதுதானே!

*****

No comments:

Post a Comment