தமிழகத்தில் தலைமையாசிரியர் இல்லாத அரசுப் பள்ளிகள்
இக்கல்வியாண்டில் தமிழகத்தில் எத்தனை அரசுப் பள்ளிகள் தலைமையாசிரியர்
இல்லாமல் இயங்குகின்றன தெரியுமா?
2023 – 2024 ஆம் கல்வியாண்டு
கணக்கின்படி 3,343 அரசுப் பள்ளிகள் தலைமையாசிரியர் இல்லாமல் இயங்குகின்றன. இவற்றுள்
தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள்
எத்தனை எனத் தெரியுமா?
தொடக்கப் பள்ளிகள் |
1,235 |
நடுநிலைப்
பள்ளிகள் |
1,003 |
உயர்நிலைப்
பள்ளிகள் |
435 |
மேல்நிலைப்
பள்ளிகள் |
670 |
ஆக மொத்தம் |
3,343 |
இவ்வளவு எண்ணிக்கையில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு
என்ன காரணம்?
இதற்கு இரண்டு முக்கியமான
காரணங்கள் கூறப்படுகின்றன.
Ø பணி ஓய்வு பெறும் வயது
58லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வு பெறுவோர் மொத்தமாக
ஓய்வு பெற்றதால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன.
Ø தலைமையாசிரியர் பதவி உயர்வைப்
பணி மூப்பின் அடிப்படையில் வழங்குவதா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள தேர்ச்சியின்
அடிப்படையில் வழங்குவதா என்று நீதிமன்றத்தில் நடைபெற்று வழக்குகள் காரணமாக நடத்த முடியாத
நிலை ஏற்பட்டிருப்பதால் தலைமையாசிரியர் நியமனங்களைச் செய்ய முடியாத நிலை கல்வித்துறைக்கு
ஏற்பட்டிருக்கிறது.
தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்துக் கல்வி ஆர்வலர்களும்
பெற்றோர்களும் நினைப்பதும் எதிர்பார்ப்பதும் என்ன?
ஒரு பள்ளியானது சீராக இயங்க
தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடமாக இருக்கக் கூடாது என்பதே கல்வி ஆர்வலர்கள்
மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும். தற்போதைய சூழலில் கல்வியானது பாட அறிவோடு,
நுண்ணறிவு, தொழில்நுட்ப அறிவு, ஒருங்கிணைந்த உடல் மற்றும் மன வளர்ச்சி, சமூக மற்றும்
ஆளுமைத் திறன்களின் மேம்பாடு எனப் பல்நோக்கில் விரிவடைந்து வருவதால் அவற்றிற்கேற்ப
திட்டமிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நிர்வகிக்கவும் ஒருங்கிணைக்கவும் ஒரு பள்ளிக்குத்
தலைமையாசிரியர் பணியிடம் என்பது அவசியமாகும். அப்படிப்பட்ட அவசியமான தலைமையாசிரியர்
பணியிடங்கள் அரசுப் பள்ளிகளில் காலியாக இல்லாமல் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் எனக்
கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
விரைவில் அனைவரது எதிர்பார்ப்பும் நிறைவேறும் என எதிர்பார்ப்போம்!
*****
No comments:
Post a Comment