கனங்களில் ஒளிந்திருக்கும் எண்களின் அழகு!
நாம் கணங்களில் (Cube
Numbers) ஒளிந்திருக்கும் எண்களின் அழகை இராமானுஜம் எண்ணைக் கொண்டு முன்பு (https://teachervijayaraman.blogspot.com/2023/07/blog-post_09.html)
பார்த்திருக்கிறோம் அல்லவா!
தற்போது கனங்களில் ஒளிந்திருக்கும்
இன்னோர் அழகைக் காண இருக்கிறோம்.
இதற்கான ஒன்பதின் மடங்குகளில்
அமைந்திருக்கும் கனங்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.
ஒன்பதின் மடங்களுகளில் அமையும்
கனங்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்!
ஆம்! சரிதான்! 93,
183, 273, 363, 453, 543,
633, 723, 813, 903, … இப்படிச் சொல்லிக்
கொண்டு போகலாம்.
இப்போது 93 இன்
மதிப்பைச் சொல்லுங்கள் பார்ப்போம்!
93 = 9 × 9 ×
9 = 729
இப்போது 93 இன்
அடிமானம் மற்றும் அடுக்கைச் சொல்லுங்கள். ஒன்பதும் மூன்றும் அல்லவா! அவை இரண்டையும்
பெருக்குங்கள். அதாவது 9 × 3 = 27.
தற்போது இந்த 27 ஐ இரு முறைப்
பெருக்கி ஒன்பதை ஒன்பதின் முதல் மடங்காகக் கொண்டு ஒன்றால் பெருக்குங்கள். அதாவது
27 × 27 × 1 = 729 என வருகிறதா?
இதே போல 183 இன்
மதிப்பைக் கொணருவதிலும் இந்த அழகு வெளிப்படும். எப்படி என்கிறீர்களா?
183 இன் மதிப்பு
5832 தானே?
இப்போது 183 இன்
அடிமானத்தையும் அடுக்கையும் பெருக்கினால் என்ன கிடைக்கும்?
18 × 3 = 54 கிடைக்குமா?
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
54 ஐ 54 ஆல் பெருக்கி, 18 ஆனது ஒன்பதின் இரண்டாவது மடங்காக வருவதால் இரண்டால் பெருக்க
வேண்டும்.
பெருக்கினால் என்ன விடை வருகிறது?
54 × 54 × 2 = 5832 என்றுதானே
வருகிறது!
அப்படியானால் 273
இன் மதிப்பிற்கும் இந்த அழகைச் சோதித்துப் பார்த்து விடுவோமா?
273 இன் மதிப்பு
19683
273 இன் அடிமானத்தையும்
அடுக்கையும் பெருக்கினால் 27 × 3 = 81
அடுத்ததாக 81 ஐ 81 ஆல் பெருக்கி,
27 ஆனது ஒன்பதின் மூன்றாவது மடங்காவதால் மூன்றாலும் பெருக்க வேண்டும்.
அதாவது 81 ×91 × 3 =
19683 என வருகிறதா?
இதன் அழகை அட்டவணைப்படுத்திப்
பார்த்தால் இன்னும் உங்களால் நன்றாக ரசிக்க முடியும். அதையும் செய்து விடுவோமே!
வ. எண் |
ஒன்பதின் மடங்கு |
அதன் கனத்தின்
மதிப்பு |
அடிமானம்
× அடுக்கின் பெருக்கல் பலன் |
பெருக்கல்
பலன் × பெருக்கல் பலன் × மடங்கின் வரிசையின் பெருக்கல் பலன் |
1 |
9 |
93
= 729 |
9 × 3 =
27 |
27 × 27 ×
1 = 729 |
2 |
18 |
183
= 5832 |
18 × 3 =
54 |
54 × 54 ×
2 = 5832 |
3 |
27 |
273
= 19683 |
27 × 3 =
81 |
81 × 81 ×
3 = 19683 |
4 |
36 |
363
= 46656 |
36 × 3 =
108 |
108 × 108
× 4 = 46656 |
5 |
45 |
453
= 91125 |
45 × 3 = 135 |
135 × 135
× 5 = 91125 |
6 |
54 |
543
= 157464 |
54 × 3 = 162 |
162 × 162
× 6 = 157464 |
7 |
63 |
633
= 250047 |
63 × 3 = 189 |
189 × 189
× 7 = 250047 |
8 |
72 |
723
= 373248 |
72 × 3 = 216 |
216 × 216
× 8 = 373248 |
9 |
81 |
813
= 531441 |
81 × 3 =
243 |
243 × 243
× 9 = 531441 |
10 |
90 |
903
= 729000 |
90 × 3 =
270 |
270 × 270
× 10 = 729000 |
இப்படியே நீங்கள் இந்த அட்டவணையைத்
தொடர்ந்து செய்து இதன் அழகில் இன்புறலாம். கனங்களில் அடங்கியுள்ள எண் அழகை ரசித்தீர்களா?
மீண்டும் இதே போன்ற எண்களின் அழகியலோடு சந்திப்போம்!
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment