Friday, 3 July 2026

ஆவிகளுடன் ஒரு டீல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 10

ஆவிகளுடன் ஒரு டீல்!

சீனர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகத்திலேயே இரண்டு விஷயங்களுக்கு அவர்கள் ரொம்பப் பிரசித்தம்.

ஒன்று, எதைப்பார்த்தாலும் தின்றுவிடுவது அதாவது, நூடுல்ஸ் முதல் வௌவால் வரை.

இரண்டு, செத்துப் போன முன்னோர்களை ரொம்ப மதிப்பார்கள். அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருப்பார்கள். அவர்களுக்கு மரியாதை செய்வதில் ஒரு சின்ன பிசிறு தட்டினாலும் சீனப் பேய்களுக்குக் கோபம் மூக்கின் மேல் வரும்.

அப்படித்தான் ஒரு சம்பவம்.

ஒரு சீனக் குடும்பம்.

அமைதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை.

திடீரென்று ஒரு நாள் வீட்டில் ஹாரர் சினிமா எபெக்ட்.

பாத்திரங்கள் உருள்கின்றன, விளக்குகள் அணைந்து எரிகின்றன.

பார்த்தால்...

ஒரு குட்டிப் பெண் பேய்!

குட்டிப் பேய் என்றாலும், டார்ச்சர் தாங்கவில்லை.

இரவெல்லாம் வீட்டில் ஒரே ரகளை.

அந்தக் குடும்பத் தலைவர் யோசித்தார். இதற்கெல்லாம் பயந்தால் காரியம் ஆகாது என்று ஒரு பிளான் போட்டார். ஒரு பெரிய சாக்குப்பையை எடுத்தார். அந்தப் பேயை எப்படியோ அமுக்கி, பைக்குள் போட்டு, சுருக்குக் கயிறு கட்டி, நேரே போய்க் கிணற்றில் ஒரு போடு போட்டார்.

அப்பாடா, தொல்லை தீர்ந்தது என்று கையைத் தட்டிக்கொண்டு வந்து படுத்தார்கள்.

மறுநாள் காலை.

சமையலறை.

அங்கே...

அதே சாக்குப்பை!

நனைந்த டவுசர் போல சொட்டச் சொட்ட நனைந்தபடி, ஹாயாக நின்றுகொண்டிருக்கிறது.

உள்ளே இருந்து ஹலோ சொல்கிறது அந்தப் பேய்.

கிணற்றில் போட்டது அப்படியே ரிட்டர்ன் பார்சல் ஆகியிருக்கிறது!

குடும்பத்திற்குப் புரிந்துவிட்டது.

இது சாதாரண கேஸ் இல்லை.

டெக்னிக்கலாகக் கையாள வேண்டும்.

சீனர்களின் அந்த முன்னோர் பாசம் அப்போதுதான் வேலை செய்தது.

இந்தப் பேய் ஏன் நம்மைத் துரத்துகிறது? இதற்கு என்ன வேண்டும்? என்று ஆராய்ந்தார்கள்.

அப்புறம்தான் மேட்டர் புரிந்தது.

அதற்குத் தேவை கொஞ்சம் அட்டென்ஷன், கொஞ்சம் மரியாதை!

உடனே ஒரு நல்ல மரக்கட்டையை எடுத்தார்கள். ஒரு தச்சர் கூட்டி வரப்பட்டார். அந்தப் பெண் பேயின் உருவத்தை அப்படியே தத்ரூபமாக அந்த மரக்கட்டையில் செதுக்கினார்கள். அதற்குப் பட்டுத் துணி உடுத்தி, மாலை போட்டு, ஊதுபத்தி ஏற்றி, அம்மா தாயே, நீயும் எங்கள் குடும்பத்து முன்னோர்களில் ஒருத்திதான் என்று பயபக்தியோடு கும்பிட்டார்கள்.

அவ்வளவுதான்!

மேடம் குஷியாகிவிட்டார்.

இதையல்லவா எதிர்பார்த்தேன்! என்பது போல ஒரு லுக் விட்டுவிட்டு, நிரந்தரமாக டிஸ்அப்பியர் ஆகிவிட்டாள்.

பேய்களுக்கும் மனிதர்களைப் போலத்தான் போலிருக்கிறது. கொஞ்சம் ஈகோ, நிறைய எதிர்பார்ப்பு. காசு, பணம் வேண்டாம்; நாலு பேர் மதித்து, ஒரு சிலை செதுக்கி மாலை போட்டால், பேயும் கூல் ஆகிவிடுகிறது!

*****

No comments:

Post a Comment