அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 13
லாக் செய்யப்பட்ட அறையும் அன்லாக் ஆன ரகசியமும்
அட்ரஸ்
ஜெருசலேம்.
அங்கே
ஒரு ரகசிய அறை.
கதவுகள்
உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கின்றன.
உள்ளே
இருந்த பதினோரு பேருக்கும் அடிவயிற்றில் பயம். காரணம், ரோம சாம்ராஜ்யத்தின் கெடுபிடி
ஒருபுறம், தங்களின் போதகர் சிலுவையில் அறையப்பட்டுவிட்டார் என்கிற அதிர்ச்சி மறுபுறம்.
திடீரென்று
பாப் அப் விண்டோ ஓப்பன் ஆவது போல, அறையின் நடுவே ஒரு உருவம்.
வேறு
யார்?
இயேசுவேதான்.
அங்கே
நிலவிய நிசப்தத்தில், சட்டென ஒரு மரண பயம் தொற்றிக்கொண்டது. யூதாஸின் காட்டிக்கொடுப்பு,
சிலுவை மரணம் என அடுத்தடுத்த ஷாக்குகளில் இருந்த சீடர்களுக்கு, கதவு பூட்டிய அறைக்குள்
திடீரென ஒருவர் பிரசன்னமானதும் மூளை ஹாலுசினேஷன் என்று கணக்குப்போட்டது.
இன்றைய
தேதியில் ஒரு பேய் வந்தால் நாம் என்ன செய்வோம்? கேமராவைத் தூக்கிக்கொண்டு ரீல்ஸ் செய்ய
ஓடுவோம். ஆனால், அன்று சீடர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
இயேசு
நிலைமையை சட்டெனப் புரிந்துகொண்டார்.
அவர்
ஒன்றும் சாதாரண போதகர் இல்லையே, மக்களின் மைண்ட் வாய்ஸை அப்படியே கேட்ச் செய்பவர்.
சுவாரசியமான
விஷயம் என்னவென்றால், அவர் அங்கே எந்த ஆன்மீக தத்துவத்தையும் பேசவில்லை. மிக எளிய,
நேரடி சயன்ஸ் தியரியைக் கையில் எடுத்தார்.
"ஏன்
பயப்படுகிறீர்கள்? உங்கள் இதயத்தில் ஏன் இந்தச் சந்தேகம்? என் கைகளையும் கால்களையும்
பாருங்கள். நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி, எனக்கு எலும்பும்
சதையும் இருக்கிறது. ஒரு பேய்க்கு இப்படி இருக்குமா?"
இயேசு
சீடர்களுக்குக் கொடுத்தது ஓர் ஓப்பன் சேலஞ்ச். "வந்து என் பிங்கர் பிரிண்ட்டைச்
செக் பண்ணுங்கப்பா!" என்பது போல.
இருந்தாலும்
சீடர்களின் முகத்தில் இன்னும் ஆப்டிகல் இல்யூஷன்தானோ என்கிற சந்தேகம் மிச்சமிருந்தது.
இயேசு
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.
"இங்கே
சாப்பிட ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டார்.
அவர்கள்
ஒரு துண்டு பொரித்த மீனையும், தேன்கூட்டையும் கொடுத்தார்கள். அதை அவர் வாங்கி அவர்கள்
கண் முன்னாலேயே சாப்பிட்டார்.
இயேசு
தன் உயிர்த்தெழுதலை நிரூபிக்க எந்தப் பெரிய அற்புதத்தையும் அங்கே செய்யவில்லை. மாறாக,
மிக எளிமையான தொடுதல், உண்ணுதல் என்ற அன்றாட மனித இயல்புகள் மூலமாகவே தன் இருப்பை வெரிபை
செய்தார்.
ஆனால்,
ஒரு கேள்வி மிச்சம் இருக்கிறது.
இறந்தவர்
உயிர்த்தெழ முடியுமா?
சயன்ஸ்படி
அதுமேஜிக் அல்லது மிராக்கிள்தான்.
அந்த
மிராக்கிள்தான் சிவாஜி படத்தில் ரஜினி சிவாஜியாக செத்து எம்ஜிஆராக உயிர்த்து வருவதற்கான
ட்விஸ்ட் வைப்பதற்கு உதவியிருக்க வேண்டும்.
*****

No comments:
Post a Comment