காலங்களை அறிவோமா?
வேனில் காலம், கார் காலம்,
கூதிர் காலம் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம் அல்லவா? அக்காலங்கள் எந்தெந்த மாதங்கள்
என்பதை அறிவோமா?
|
காலம் |
தமிழ் மாதங்களில் |
ஆங்கில மாதங்களில் |
|
இளவேனில் (கோடைக்காலம்) |
சித்திரை, வைகாசி |
ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து ஜூன்
முற்பகுதி வரை |
|
முதுவேனில் (கோடைக்காலம்) |
ஆனி, ஆடி |
ஜூன் பிற்பகுதியிலிருந்து ஆகஸ்ட் முற்பகுதி வரை |
|
கார் காலம் (மழைக் காலம்) |
ஆவணி, புரட்டாசி |
ஆகஸ்ட் பிற்பகுதியிலிருந்து அக்டோபர் முற்பகுதி வரை |
|
கூதிர் காலம் (குளிர் காலம்) |
ஐப்பசி, கார்த்திகை |
அக்டோபர் பிற்பகுதியிலிருந்து டிசம்பர் முற்பகுதி வரை |
|
முன்பனிக் காலம் (பனிக் காலம்) |
மார்கழி, தை |
டிசம்பர் பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி முற்பகுதி வரை |
|
பின்பனிக் காலம் (பனிக் காலம்) |
மாசி, பங்குனி |
பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து ஏப்ரல் முற்பகுதி வரை |
தமிழ் இலக்கியத்தில்
குறிப்பிடப்படும் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை குறித்த நேர அளவுகளையும்
அறிந்து கொள்வோமா?
|
காலை |
முற்பகல் 6 மணியிலிருந்து முற்பகல் 10 மணி வரை |
|
நண்பகல் |
முற்பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை |
|
எற்பாடு |
பிற்பகல் 2 மணியிலிருந்து பிற்பகல் 6 மணி வரை |
|
மாலை |
பிற்பகல் 6 மணியிலிருந்து பிற்பகல் 10 மணி வரை |
|
யாமம் |
பிற்பகல் 10 மணியிலிருந்து முற்பகல் 2 மணி வரை |
|
வைகறை |
முற்பகல் 2 மணியிலிருந்து முற்பகல் 6 மணி வரை |
*****

No comments:
Post a Comment