மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு
அரசு அளிக்கும் வீட்டுக்கடனைத் தேர்ந்தெடுப்பது அரசு ஊழியர்களுக்குப் பல லட்ச ரூபாய்
வட்டியை மிச்சம் செய்து கொடுக்கும். அதைத் தாண்டியும் அரசின் வீட்டுக்கடன் திட்டத்தைப்
பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளன. அவற்றை இங்கே கீழே உள்ள அட்டவணையில் ஒப்பிட்டுக்
காண்போம்.
வ. எண் |
அரசு வழங்கும் வீட்டுக்கடன் |
வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன் |
1. |
வட்டி விகிதம் நிலையாக இருக்கும். |
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப மாறிக் கொண்டு இருக்கும். |
2. |
வட்டி விகிதம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்படுகிறது. |
ஒவ்வொரு காலாண்டுக்கும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப
பரிசீலிக்கப்படுகிறது. |
3. |
தனிவட்டி முறையில் வட்டிக் கணக்கிடப்படுகிறது. |
கூட்டு வட்டி முறையில் வட்டி கணக்கிடப் படுகிறது. |
4. |
தவணையைச் செலுத்த எஞ்சியுள்ள அசல் தொகைக்கு மட்டுமே வட்டி
கணக்கிடப்படும். |
ஒட்டுமொத்த அசல் தொகைக்கும் கணக்கிடப்படுகிறது. |
5. |
அசல் அதிகபட்சமாக 180 தவணைகளிலும் வட்டி அதிகபட்சமாக 60 தவணைகளிலும்
பிரித்து பிடிக்கப்படும். |
அசலையும் வட்டியையும் இணைத்தே தவணைகள் பிடிக்கப்படும். |
6. |
வட்டியைச் செலுத்தும் கடைசி 60 தவணைகளில் வட்டி கணக்கிடப்பட
மாட்டாது. |
வட்டியைச் செலுத்தும் காலத்திலும் வட்டிக்கு வட்டிக் கணக்கிடப்படும். |
7. |
வட்டித்தொகை வங்கிகளை விட நாற்பது சதவீதத்திற்கும் மேலாகக்
குறைவாக இருக்கும். |
வட்டித்தொகை அரசு வழங்கும் வீட்டுக்கடனை விட நாற்பது சதவீதத்திற்கு
மேல் அதிகமாக இருக்கும். |
8. |
உதாரணமாக பத்து லட்சத்திற்கான வட்டித்தொகை உத்தேசமாக ஆறு லட்சம்
அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலாக இருக்கும். |
உதாரணமாக பத்து லட்சத்திற்கான வட்டித்தொகை உத்தேசமாக பதினோரு
லட்சத்திற்கு மேல் இருக்கும். |
9. |
மாதத் தவணைத்தொகை
வங்கித் தவணைத்தொகையை விட 70 சதவீதம் குறைவாக இருக்கும். |
மாதத் தவணைத் தொகை அரசு வீட்டுக்கடனுக்கான தவணைத் தொகையை விட
70 சதவீதத்திற்கு மேல் அதிகமாக இருக்கும். |
10. |
பணிக்காலம் குறைவாக இருந்தாலும் அதிபட்ச வீட்டுக்கடனைப் பெற்று
மீதமுள்ள கடனைப் பணிக்கொடையில் சரிகட்டிக் கொள்ளலாம். |
பணிக்காலம் குறைவாக உள்ளோருக்கு வீட்டுக்கடன் தொகை குறைவாக
வழங்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. |
11. |
சம்பளத்தொகையில் நாற்பது சதவீதம் வரை தவணைத்தொகையைக் பிடித்தம்
செய்து கொள்ளச் செய்யலாம்.. |
சம்பளத்தொகையிலிருந்து எடுத்துக் கட்ட வேண்டும். அல்லது சம்பளக்
கணக்கிலிருந்து பிடித்தம் செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். |
மேற்காணும் காரங்களால் அரசு
ஊழியர்கள் வங்கி வழங்கும் வீட்டுக்கடனை விட அரசு வழங்கும் வீட்டுக்கடனைத் தேர்வு செய்வதே
லாபகரமாகவும் பொருளாதார ரீதியாக உதவிகரமாகவும் இருக்கும்.
இத்தகவல்கள் உங்களுக்குப்
பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு
இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment