தங்கத்தை வாங்க 12 காரணங்கள்
ஏன் தங்கத்தை வாங்க வேண்டும்
என்பதற்கு மாமாங்க காரணங்கள் இருக்கின்றன. அதாவது பனிரெண்டு காரணங்கள் இருக்கின்றன.
1)
உலகளவிலான நிதி நெருக்கடி நிலை, பொருளாதார மந்த நிலை என எந்த
நிலை வந்தாலும் தங்கத்தின் மதிப்பு ஏறும்.
2)
தங்கத்தைப் பணமாக்குவது எளிது. பணத்தைத் தங்கமாக்குவதும் எளிது.
3)
வாங்குவதும் விற்பதும் எளிது மற்றும் எப்போதும் சாத்தியம்.
4)
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பெரிய முதலீட்டு அறிவோ, மூளையைக்
கசக்கிக் கொள்ளும் ஆய்வுகளோ தேவையில்லை.
5)
தங்கம் ஒரு நல்ல சொத்து. இடத்தை அடைத்துக் கொள்ளாது. போகும்
இடமெல்லாம் எடுத்துக் கொண்டு போக எளிதானது. உங்கள் சொத்தாகக் கருதும் வீட்டை இப்படி
நீங்கள் பெயர்த்து எடுத்துக் கொண்டெல்லாம் போக முடியாது.
6)
எல்லா சொத்துகளைப் போலவும் தங்கமும் ஆண்டுகள் ஆக ஆக விலை ஏறும்.
7)
சரிவிகிதத்தில் ஒரு முதலீட்டுக் கலவையை உருவாக்கும் போது தங்க
முதலீடு அதில் முதன்மையான இடத்தை வகிக்கக் கூடியது.
8)
பங்குகள் சரியாக விலையேறாமல் போகலாம். தங்கம் அப்படிப்பட்டது
இல்லை. தங்கம் விலையேறாமல் ஏமாற்றி விடாது.
9)
பங்குச் சந்தை சரியாகச் செயல்படாத போது தங்கத்தின் விலை அசுரத்தனமாக
ஏறும்.
10)
தங்கத்தைப் போன்ற மதிப்புமிக்க, அன்றாட வணிகப் பயன்பாட்டில்
உள்ள அன்பளிப்பு வேறு ஏதும் இருக்கிறதா என்ன? மற்றும் பணத்திற்கான சுலபமான பண்டமாற்றுப்
பொருள் தங்கம். தங்க நகை அடகுக் கடைகளை நீங்கள் குக்கிராமங்களிலும் பார்க்க முடியும்.
11)
அவரச காலங்களிலும் அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்ள தங்கம்
துணை நிற்கும்.
12)
பணவீக்கத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு ஓடக் கூடிய திராணி தங்கத்திற்கு
இருக்கிறது.
ஆகவே நீங்கள் தங்கத்தைத்
தாரளமாக வாங்கலாம். தங்கத்தின் இருப்பை அடிப்படையாக வைத்தே பணம் அச்சடிக்கப்படுகிறது
என்பதால் பணத்திற்கான அடிப்படையான தங்கத்தை வாங்க இதைத் தவிர வேறு இன்னும் ஏதேனும்
விஷேசக் காரணம்தான் தேவையா என்ன?
இத்தகவல்கள் உங்களுக்குப்
பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு
இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்!
*****
யதார்த்தமான உண்மை தான். அதனால் தான் ஏழைகள் கடன்பட்டாவது தங்கத்தை வாங்குகின்றனர்... திருமணத்தில் முக்கிய அங்கமாக திகழ்கிறது.
ReplyDelete