Libre Office இல் இணையலாம்!
MS
Office இன் பழைய Version களில் எளிமையாக வேலை செய்ய முடிவதைப் போல அண்மை கால MS
Office Version களில் வேலை செய்ய முடிவதில்லை. அடிக்கடி Update கேட்பது, License
Key கேட்பது என்று புதிய MS Office Versionகள் லந்து செய்கின்றன. இந்த லந்திலிருந்து
விடுபட்டு எளிமையாகவும் இனிமையாகவும் வேலை செய்ய MS Office ஐப் போல வேறு Software இருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தால் நீங்கள் Libre Office இல் இணையலாம்.
Libre
Office இன் சௌகரியம் அது ஒரு Open Source Software என்பதுதான். MS Office ஐப் போல பணம்
கொடுத்து வாங்க வேண்டியதில்லை. License Key போன்ற பிரச்சனைகள் அறவே இல்லை. தேவைப்பட்டால்
நீங்கள் நினைத்தால் Update செய்து கொள்ளலாம். இல்லையென்றால் பழைய Version இல் தொடரலாம்.
அதற்கு முன்
Libre Office ஐப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது நலம். MS Office ஐப் பயன்படுத்தத்
தெரிந்தவர்களுக்கு Libre Office ஐப் பயன்படுத்துவதைப் பற்றிப் பெரிதாக எதையும் சொல்ல
வேண்டியதில்லை. சொல்ல வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால்,
Ø MS Office இன் Word க்கு Libre Office இல் Writer
என்று பெயர்.
Ø MS Office இன் Excel க்கு Libre Office இல் Calc
என்று பெயர்.
Ø MS Office இன் Power Point க்கு Libre Office இல்
Impress என்று பெயர்.
Ø MS Office இன் Paint க்கு Libre Office இல் Draw
என்று பெயர்.
Ø இது தவிர Databases க்கு Base ம், Formula
Editiing க்கு Math ம் உள்ளது.
MS Office ஐ விட Libre Office இல் உள்ள இன்னொரு கூடுதல் சௌகரியம்
என்னவென்றால் Writer ஐ Open செய்தாலே அதிலிருந்து Calc, Impress என்று தேவையானதற்கு
மாறிக் கொள்ளலாம். அதாவது எதாவது ஒன்றை Open செய்தால் தேவைப்பட்டதற்கு மாறிக் கொள்ளலாம்.
MS Office இல் இப்படி நீங்கள் மாறிக் கொள்ள முடியாது. ஒவ்வொன்றையும் தனித்தனியாகத்தான்
Open செய்து கொள்ள வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி மாறி Open செய்து கொள்ள
முடியாது. மற்றபடி Libre Office ஐ Instal செய்து கொண்டு ஒவ்வொன்றையும் நோண்டி நோண்டி
நீங்களே கற்றுக் கொள்ளலாம். உதவி தேவையென்றால் அதற்குரிய Pdf guide இல் படித்துத் தெரிந்து
கொள்ளலாம். உங்களுக்கு Libre Office பிடித்திருந்தால் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி
Download செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment