பயணங்களுக்கான இ – பதிவுக்கு…
17.05.2021 காலை 6 மணி முதல் மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே
பயணம் மேற்கொள்ள இ – பதிவைக் கட்டாயமாக்கியுள்ளது தமிழக அரசு. இது இ – பாஸ் போன்று
விண்ணப்பித்து அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய ஒன்றல்ல, இ – பதிவு மட்டுமே ஆகும்.
திருமணம் முக்கிய உறவினர்களின் இழப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் முதியவர்களுக்கான
தேவை ஆகியவற்றுக்கு இ -பதிவு செய்து பயணம் மேற்கொள்வது கட்டாயம் ஆகும். இப்பதிவைச்
செய்வதற்கு இணையதளத்தில் தங்களது அலைபேசி எண்ணைப் பதிந்து அதற்கு வரும் OTP ஐப் பெற்று
உள்நுழைந்து பயணத்துக்குரிய காரணத்தைப் பதிய வேண்டும். இது குறித்த பதிவை மேற்கொள்வதற்குக்
கீழே உள்ள இணைய தள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment