Saturday 15 May 2021

PH பற்றி அறிந்து கொள்வோம்!

PH பற்றி அறிந்து கொள்வோம்!

            அமில மற்றும் காரத்தன்மைப் பற்றி அறிய அறிவியலில் PH அளவு பயன்படுகிறது. PH என்பதன் விரிவாக்கம் Potential of Hydrogen என்பதாகும்.

            ஒரு பொருளில் PH அளவு 0 லிருந்து 7 வரை இருக்கும் போது அது அமிலமாகவும் வும் 7 லிருந்து 14 வரை இருக்கம் போது காரமாகவும் அறியப்படுகிறது.

            உடல்நலத்தைப் பொருத்த வரையில் PH அளவு 7க்குக் கீழே செல்லும் போது நோய்கள் உண்டாக ஏதுவாக அமைவதாக மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட பொட்டலத்தில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுகள், சந்தைப்படுத்தப்படும் குளிர்பானங்கள் ஆகியவற்றில் PH அளவு 7க்குக் குறைவாக இருக்கும். PH அளவு 7க்குக் கீழே குறைவதால் நோய்கள் உண்டாகும் என்பதால் PH அளவு 7 ஐ விட குறைவாக இருக்கும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவுகள், சந்தைப்படுத்தப்படும் குளிர்பானங்கள் போன்றவை பல்வேறு நோய்கள் உண்டாக ஏதுவாக அமைகின்றன. ஆகவே அது போன்ற உணவுகளைத் தவிர்த்து உடல்நலத்தை மேம்படுத்தும் PH அளவு கூடுதலாக உள்ள வீட்டில் தயாரித்து உண்ணும் உணவை நாடுவது நலமானது.

Fast food, Packaged food items, Cool Drinks போன்றவைகளை இயன்ற அளவு தவிர்க்கச் சொல்வதற்கான காரணம் அதிலுள்ள PH அளவின் குறைவே ஆகும். உங்களுக்குத் தெரிந்த இப்பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் உடல்நலம் மேம்பட உதவுங்கள்!

*****

No comments:

Post a Comment