மயங்கொலிச் சொற்களுக்கான பயிற்சி
1. மயங்கொலிச் சொற்களின் பொருள்
அறிக.
அ) புல் – சிறு தாவரம் (அருகம் புல் சாறு உடலுக்கு
நல்லது)
புள் – பறவை (மரக்கிளையில் புள் ஒன்று பறந்து வந்து அமர்ந்தது)
ஆ) ஆல் – ஆலமரம் (பிள்ளையாரை ஆல் அமர்ச் செல்வர்
என்பர்)
ஆள் – மனிதர் (இந்த வேலையைச் செய்ய ஒரு ஆள் போதும்)
இ) தினை – சிறுதானியம் (தினையில் செய்யும் கஞ்சி
சத்தான உணவாகும்)
திணை – ஒழுக்கம் (மனிதர்கள் உயர்திணையைச் சார்ந்தவர்கள் ஆவர்)
2. கோடிட்ட இடத்தைச் சரியான சொல்லால்
நிரப்புக.
அ) குரங்கு மரக் …………. (கிழை, கிளை) யில் தொங்கியது.
விடை : கிளை
ஆ) இமய ………….. (மழை, மலை) மிகவும் உயரமானது.
விடை : மலை
3. மயங்கொலிப் பிழையை நீக்கி எழுதுக.
அ) ஓணாய் மளையில் நனைந்ததது.
விடை : ஓநாய் மழையில் நனைந்தது.
ஆ) கார்று அதிவேகமாக வீசியதால், முருங்கை மறம் சாய்ந்தது.
விடை : காற்று அதிவேகமாக வீசியதால் முருங்கை மரம் சாய்ந்தது.
4. தொடரில் அமைத்து எழுதுக.
அ) பனி
விடை : மார்கழி பனி பொழியும் மாதம் ஆகும்.
ஆ) பணி
விடை : கடமையைச் செய்வது நமது பணி ஆகும்.
5. மயங்கொலிச் சொற்களைப் பயன்படுத்தி
தொடர்கள் எழுதுக.
மலை – மழை – கிளி – புலி – கிழி
– புளி
விடை : மலையிலிருந்து கதிரவன் தோன்றும் காட்சி அருமையானதாகும். மழை பொழியும்
போது நனையாமல் குடை பிடித்துச் செல்வது நலமாகும். மரக்கிளையில் அமர்ந்திருக்கும் கிளியைக்
காண்பது இனிமையானதாகும். காட்டுப்புலியின் கம்பீரம் காண்பதற்கு வியப்பாக இருக்கும்.
புத்தகங்களைக் கிழித்து விடாமல் பராமரிப்பது நல்ல பண்பாகும். மரத்தில் காய்க்கும் புளியைத் தின்பதற்குப் புளிப்பாக
இருக்கும்.
*****
இதனை PDF ஆகப் பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment